English-Video.net comment policy

The comment field is common to all languages

Let's write in your language and use "Google Translate" together

Please refer to informative community guidelines on TED.com

TED2007

Bill Clinton: My wish: Rebuilding Rwanda

ருவாண்டா நாட்டின் புனரமைப்பைப் பற்றி பில் கிளிண்டன்

Filmed
Views 853,060

2007 TED பரிசினை ஏற்றுக்கொண்டு, ருவாண்டா நாட்டில் நலத்திட்டப் பணிகளை கொணர உதவுமாறு பில் கிளிண்டன் கோருகிறார் - நலத்திட்டப் பணிகள் ஏனைய நாடுகளுக்கும் தான்.

- Activist
Through his William J. Clinton Foundation, former US President Bill Clinton has become a vital and innovative force for world change. He works in four critical areas: health, economic empowerment, citizen service, and reconciliation. Full bio

I thought in getting up to my TED wish
TED-இன் விருப்பங்களுக்கு ஏற்றவாறு சிந்திக்கும் பணிக்கு என்னை நானே தேற்றிக்கொள்ள விழைந்தேன்.
00:25
I would try to begin by putting in perspective what I try to do
நான் செய்ய எத்தனிப்பதை ஒருமுகப்படுத்தும் முகமாக நான் முயற்சி செய்கிறேன்.
00:31
and how it fits with what they try to do.
அது எவ்வாறு அவர்களது செயலுக்கு ஏற்றவாறு அமைகிறது என்று பார்ப்போம்.
00:38
We live in a world that everyone knows is interdependent,
நாம் வாழும் உலகிலே நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் சார்ந்தவர்கள் என்று நம் எல்லோருக்கும் தெரியும்.
00:42
but insufficient in three major ways.
ஆனால் அது மூன்று வழிகளில் போதுமானதாக இல்லாமல் இருக்கிறது.
00:47
It is, first of all, profoundly unequal:
முதன்மையாக, அது சமத்துவம் அளிக்காமல் இருத்தல்
00:53
half the world's people still living on less than two dollars a day;
உலகிலுள்ள பாதி மக்கள் இரண்டு டாலருக்கும் குறைவான பணத்தில் அன்றாடம் வாழ்க்கை நடத்துகின்றனர்.
00:56
a billion people with no access to clean water;
1 பில்லியன் மக்களுக்கு தூய்மையான நீர் கிட்டுவதில்லை.
01:00
two and a half billion no access to sanitation;
இரண்டரை பில்லியன் மக்களுக்கு பொது சுகாதாரம் கிட்டுவதில்லை.
01:02
a billion going to bed hungry every night;
ஒரு பில்லியன் மக்கள் அன்றாடம் பட்டினியுடன் தூங்குகின்றனர்.
01:05
one in four deaths every year from AIDS, TB, malaria
ஆண்டுதோறும் நான்கில் ஒரு சாவு, எய்ட்ஸ், எலும்புருக்கி நோய் மற்றும் மலேரியாவால் நிகழ்கிறது.
01:07
and the variety of infections associated with dirty water --
அசுத்தமான நீரினால் ஏற்படும் தோற்று மற்றொரு புறம்
01:12
80 percent of them under five years of age.
80% - விகிதத்தினர் ஐந்து வயதிற்கு குறைவானவர்கள்.
01:16
Even in wealthy countries it is common now to see inequality growing.
பணக்கார நாடுகளில் கூட இன்றைக்கு சமமின்மை வளர்வதை பொதுவாக காண முடிகிறது.
01:19
In the United States, since 2001 we've had five years of economic growth,
2001-இலிருந்து, அமெரிக்க நாட்டில் ஐந்து ஆண்டுகளுக்கு நாம் பொருளாதார வளர்ச்சியை பார்த்தோம்.
01:25
five years of productivity growth in the workplace,
வேலையிடத்தில் ஐந்து ஆண்டுக்கான உற்பத்தித்திறன் வளர்ச்சியை பார்த்தோம்.
01:30
but median wages are stagnant and the percentage of working families
ஆனால் நடுநிலை சம்பளம் தேக்கநிலையிலேயே உள்ளது. மேலும் வேலைக்கு செல்லும் குடும்பங்களின் விழுக்காட்டில்
01:33
dropping below the poverty line is up by four percent.
வறுமைக்கோட்டுக்கு கீழே 4 விழுக்காட்டிற்கு சரிந்துள்ளது.
01:37
The percentage of working families without health care up by four percent.
காப்பீடு இல்லாமல் இருக்கும் வேலைக்குச் செல்லும் குடும்பங்களின் விழுக்காடு 4 விழுக்காடு உயர்ந்துள்ளது
01:41
So this interdependent world which has been pretty good to most of us --
ஆக நமக்கு நல்லதாக இருந்த ஒருவருக்கொருவர் சார்ந்து இருக்கும் இவ்வுலகம் --
01:45
which is why we're all here in Northern California doing what we do
அதனால்தான் நாம் எல்லோரும் வடக்கு கலிபோர்னியாவில் இப்போது என்ன செய்துக்கொண்டு இருக்கின்றோமோ
01:49
for a living, enjoying this evening -- is profoundly unequal.
உயிர் வாழ்வதற்கும், இந்த இனிய மாலைப் பொழுதை அனுபவிப்பதிலும் -- எவ்வளவு சமமின்மை பொருந்தியதாய் உள்ளது.
01:53
It is also unstable.
இது மிகவும் நிலையற்றதும் ஆனது.
01:58
Unstable because of the threats of terror,
ஏன் நிலையற்றது என்றால், தீவிரவாத அச்சுறுத்தலாலும்,
02:01
weapons of mass destruction, the spread of global disease
பேரழிவு தரக்கூடிய ஆயுதங்களாலும், புவியெங்கும் பரவும் நோய்களினாலும்,
02:05
and a sense that we are vulnerable to it in a way that we weren't not so many years ago.
உள்ளூர, பல்லாண்டுகளாக இல்லாத வண்ணம், நாம் இக்கொடுமைகளுக்கு இறையாகிவிடுவோமோ என்ற உணர்வுந்துதல்.
02:08
And perhaps most important of all, it is unsustainable
எல்லாவற்றிற்கும் மேலாக, இதன் (புவியின்) ஏந்தும் தன்மை குறைந்துள்ளதனாலும்,
02:15
because of climate change, resource depletion and species destruction.
புவியின் கால நிலை மாற்றத்தாலும், இயற்கை வள நலிவுருதலாலும் மற்றும் பல உயிரினங்கள் அழிவதனாலும்.
02:19
When I think about the world I would like to leave to my daughter
நான் எந்த மாதிரியான உலகத்தை எனது மகளுக்கு மற்றும்
02:27
and the grandchildren I hope to have,
நான் பெற விரும்பும் பேரப்பிள்ளைகளுக்கு விட்டுச்செல்வேன் என்று சிந்திக்கும்போது
02:31
it is a world that moves away from unequal, unstable, unsustainable
சமமற்ற, நிலையற்ற, புதுப்பிக்க இயலாத உலகிலிரிருந்து,
02:33
interdependence to integrated communities -- locally, nationally and globally --
அது ஒர்வருக்கொருவர் சார்ந்த மற்றும் ஒருங்கிணைந்த சமுதாயங்களையுடைய உலகாக -- உள்ளூர், நாடளாவிய மற்றும் உலகளாவிய மட்டத்தில் --
02:40
that share the characteristics of all successful communities:
வெற்றிபெற்ற ஒரு சமுதாயத்தின் இயல்புகளை உள்ளடக்கிய உலகாக தன்னைத்தானே மாற்றிக்கொள்ளும்.
02:45
a broadly shared, accessible set of opportunities,
எல்லோரும் பகிர்ந்துக்கொள்ளக்கூடிய, வாய்ப்புகளின் தொகுப்புகளை அணுக்க வேண்டி
02:48
a shared sense of responsibility for the success of the common enterprise
நம்மில் பொதுவான வினைதிட்பங்களின் வெற்றிக்காக நாம் பகிரக்கூடிய பொறுப்புணர்வுக்காகவும்
02:54
and a genuine sense of belonging.
இதன் பால் எனது சொந்தம் உள்ளது என்ற உணர்வு உள்ளது என்பதற்காகவும்.
02:58
All easier said than done.
எல்லாம் சொல்வதற்கு சுலபமாகவும் செய்வதற்கு சற்று கடினமாகவும் தான் இருக்கும்.
03:04
When the terrorist incidents occurred in the United Kingdom a couple of years ago,
சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டனில் தீவிரவாத செயல்கள் சில நடைபெற்ற பொது
03:07
I think even though they didn't claim as many lives as we lost in the United States on 9/11,
நாம் நமது நாடான ஐக்கிய அமெரிக்காவில், 9/11-இன் போது இழந்த உயிர்களின் எண்ணிக்கையை விட சிறியதாக இருந்தபோதிலும்கூட
03:13
I think the thing that troubled the British most
பிரித்தானியர்களை மிகவும் கவலை கொள்ளச்செய்தது எது என்று நான் நினைக்கிறேன் என்றால்
03:18
was that the perpetrators were not invaders, but homegrown citizens
அத்தீவிரவாதச்செயல்களை செய்தவர்கள் வெளிநாட்டினர் அல்லாமல் உள்ளூர் குடிமக்களாய் இருந்ததுதான்.
03:20
whose religious and political identities were more important to them
அவர்களது சமய மற்றும் அரசியல் அடையாளங்கள்,
03:25
than the people they grew up with, went to school with,
தங்களோடு வளர்ந்த மக்களை விட, தங்களோடு பள்ளிக்கு சென்றவர்களை விட, தங்களோடு வேலை செய்தவர்களை விட,
03:30
worked with, shared weekends with, shared meals with.
தங்களோடு விடுமுறையை லழித்தவர்களை விட, தங்களோடு கூட்டாஞ்சோறு உண்டவர்களை விட, அவர்களது அந்த அடையாளங்கள் முக்கியமாக போய் விட்டது.
03:33
In other words, they thought their differences
வேறு மாதிரி சொல்லவேண்டும் என்றால், அவர்களது மாறுபாடுகள்
03:36
were more important than their common humanity.
பொதுவான மந்த நேயத்தை விட அவர்களுக்கு முக்கியமாக போய்விட்டது.
03:39
It is the central psychological plague of humankind in the 21st century.
இது 21-ஆம் நூற்றாண்டில் மனித இனத்திற்கு பீடித்த ஒரு கொடூரமான உளவியல் கொள்ளை நோய்.
03:43
Into this mix, people like us, who are not in public office,
இந்த கலவையில், பொது வாழ்வில் இல்லாத நம்மை போன்றவர்கள்
03:50
have more power to do good than at any time in history,
வரலாற்றில் என்றும் இல்லாத அளவிற்கு நன்மை செய்திட ஆற்றல் நிலவுகிறது.
03:55
because more than half the world's people
ஏனென்றால் உலகில் பாதிக்கும் மேற்பட்டோர்
04:00
live under governments they voted in and can vote out.
தாங்கள் தேர்ந்தெடுத்த மற்றும் தூக்கி எறிய நினைக்கும் அரசுகளின் கீழ் வாழ்கிறார்கள்.
04:02
And even non-democratic governments are more sensitive to public opinion.
ஜனநாயகமில்லாத அரசுகளையுடைய அரசுகளும் பொதுக் கருத்துக்கு செவி சாய்க்கும் நிலை உள்ளது.
04:05
Because primarily of the power of the Internet,
இது இணையத்தின் ஆற்றலினால் முதற்க்கண் ஏதுவாகிறது.
04:09
people of modest means can band together and amass vast sums of money
சாதாரண மக்கள் ஒன்றிணைந்து பெரும் செல்வம் குவிக்க வழி செய்கிறது.
04:14
that can change the world for some public good if they all agree.
இது அவர்கள் எல்லோரும் ஒப்புக்கொண்டால், ஓரளவு பொது நன்மைக்கு உலகை மாற்ற வழி செய்கிறது.
04:20
When the tsunami hit South Asia, the United States contributed 1.2 billion dollars.
பேரலை (சுனாமி) தெற்காசிய மண்டலத்தை தாக்கிய பொது, அமெரிக்கா 1.2 பில்லியன் டாலர்களை கொடை அளித்தது.
04:24
30 percent of our households gave.
நமது குடும்பங்களில் 30 விழுக்காட்டினர் பங்களித்தனர்.
04:29
Half of them gave over the Internet.
அதில் பாதி பேர் இணையத்தின் வாயிலாக பங்களித்தனர்.
04:31
The median contribution was somewhere around 57 dollars.
அந்த பங்களிப்பின் நடுநிலை மதிப்பு 57 டாலருக்கு அருகில் இருந்தது.
04:33
And thirdly, because of the rise of non-governmental organizations.
மூன்றாவதாக, அரசு சாரா நிறுவனங்களின் எண்ணிக்கை பெருகியதால்.
04:39
They, businesses, other citizens' groups, have enormous power
அவர்கள், தொழில்கள் மற்றும் ஏனைய குடிமக்கள் சங்கங்கள், நமது சக
04:44
to affect the lives of our fellow human beings.
மனிதர்களின் வாழ்கையில் பங்காற்ற நிறைய ஆற்றல் பொருந்தியவர்கள்.
04:50
When I became president in 1993,
நான் 1993-ஆம் ஆண்டு அமெரிக்க குடியரசுத்தலைவராக பதவியேற்ற பின்,
04:55
there were none of these organizations in Russia.
ரஷ்ய நாட்டில் இவற்றில் ஒன்று கூட இருந்திருக்கவில்லை.
04:57
There are now a couple of hundred thousand.
இப்போது சில நூறாயிரம் நிறுவங்கள் உள்ளன.
04:59
None in India. There are now at least a half a million active.
இந்தியாவிலும் ஒன்றும் இருந்திருக்கவில்லை. இப்போது 5 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளன.
05:01
None in China. There are now 250,000 registered with the government,
சீனாவிலும் ஒன்றும் இருந்திருக்கவில்லை. இப்போது 2,50,000 நிறுவனங்கள் அந்த அரசோடு பதிவு பெற்றிருக்கின்றன.
05:05
probably twice again that many who are not registered for political reasons.
ஒருக்கால் அதிலும் இரு மடங்கு இருந்திருக்கக்கூடும். ஆனால் சில பல அரசியல் காரணங்களுக்காக அவ்வளவு இல்லை.
05:08
When I organized my foundation, and I thought about the world as it is
நான் எனது நிறுவனத்தை தொடங்கியபோது, இப்போது இருக்கும் உலக நிலையையும்,
05:14
and the world that I hope to leave to the next generation,
நான் எனது அடுத்த தலைமுறைக்கு விட்டுச்செல்ல விழையும் உலக நிலையையும் எண்ணிப்பார்க்கிறேன்.
05:22
and I tried to be realistic about what I had cared about all my life
நான் எனது வாழ்நாள் முழுவதும் எதனைப்பற்றி மட்டுமே கவனம் செலுத்தலானேன் என்று யதார்த்தமாக
05:27
that I could still have an impact on.
சிந்தித்து அந்த விஷயம் என் மேல் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் சிந்தித்தேன்.
05:34
I wanted to focus on activities
நான் எந்த மாதிரி செயல்களில் கவனம் செலுத்த வேண்டும் என்றால்,
05:36
that would help to alleviate poverty, fight disease, combat climate change,
வறுமை ஒழிப்பில், நோயை குணப்படுத்துவதில், காலநிலை மாற்றத்தை தடுப்பதில்,
05:39
bridge the religious, racial and other divides that torment the world,
சமய மற்றும் இனம் சார்ந்த, இவ்வுலகை உலுக்கும் பிளவுகளுக்கு உறவுப்பாலம் இடுவதில் என்பதில் தான்.
05:46
but to do it in a way that would either use
நான் செய்யும் செயல்கள் எவ்வழியில் செய்யப்படவேண்டும் என்றால்,
05:50
whatever particular skills we could put together in our group
ஒரு குழுவாக நாம் செயல்படும்போது, நமது குறிப்பிட்ட திறமைகளை உள்ளடக்கி
05:54
to change the way some public good function was performed
ஒரு பொது நலனை மாற்றி அமைத்த பெருமையோடு
06:00
so that it would sweep across the world more.
அது இவ்வுலகம் முழுமையும் பேசப்பட்டு செயல்படுத்துவது போல் அமைய வேண்டும்
06:05
You saw one reference to that in what we were able to do with AIDS drugs.
அப்படி ஒரு உதாரணமாக ஏமமிலி (எய்ட்ஸ்) நோய்க்கு மருந்து வேண்டி நாம் செய்த செயல்களை குறிப்பிடலாம்.
06:08
And I want to say that the head of our AIDS effort,
மேலும், நமது ஏமமிலிக்கு மருந்து குறித்த முயற்சிக்கு தலைமை தாங்கிய
06:14
and the person who also is primarily active in the wish I'll make tonight,
மற்றும் நான் இந்த இரவு பொழுதில் கூற விரும்பும் விஷயத்தில் முதன்மையாக தன்னை முன்னிறுத்திக் கொண்டவரான
06:17
Ira Magaziner, is here with me and I want to thank him for everything he's done.
இரா மகசினர், இப்போது என்னோடு உள்ளார், அவர் செய்த எல்லாவற்றிற்கும் அவருக்கு முதற்க்கண் நன்றி கூற விரும்புகிறேன்.
06:21
He's over there.
அவர் அங்கு உள்ளார்
06:25
(Applause)
கைதட்டல்
06:27
When I got out of office and was asked to work, first in the Caribbean,
நான் அலுவலகத்திலிருந்து வெளியேறும் பொது, முதலில் கரிபியன் தீவுகளில் பணியினை தொடங்குமாறு என்னை கேட்டுக்கொண்டதன் பேரில்.
06:31
to try to help deal with the AIDS crisis,
ஏமமிலி (எய்ட்ஸ்) ஏற்படுத்திய பேரழிவிலிருந்து உலகினை காப்பற்ற உதவும் பொது,
06:37
generic drugs were available for about 500 dollars a person a year.
ஒரு மனிதனுக்கு ஒரு ஆண்டிற்கு சராசரியாக $500 என்ற விலையில் மருந்துகள் கிடைக்கப் பெற்றன.
06:40
If you bought them in vast bulks,
நீங்கள் அவற்றை கூடுதலான எண்ணிக்கையில் வாங்கினால்
06:44
you could get them at a little under 400 dollars.
$400-க்கு சற்று குறைவான விலையில் அதனை வாங்கியிருக்கலாம்.
06:46
The first country we went to work in, the Bahamas,
நாங்கள் முதலில் வேலை செய்யச் சென்ற நாடான, பஹாமாஸ் தீவுகளில்,
06:49
was paying 3,500 dollars for these drugs.
இந்த மருந்தை வாங்க அங்கு அவர்கள் $3500 செலவு செய்தனர்.
06:52
The market was so terribly disorganized
இந்த மருந்தின் சந்தை ஒழுங்கு படுத்தப்படாமல் இருந்தது.
06:54
that they were buying this medicine through two agents
இந்த மருந்தினை இரண்டு முகவர்களிடமிருந்து வாங்கிக்கொண்டு இருந்தனர்.
06:57
who were gigging them sevenfold.
அவர்கள் ஏமமிலி பாதித்தவர்களை 7 மடங்கு விலை வைத்து விற்று ஏமாற்றிக் கொண்டு இருந்தனர்.
07:01
So the very first week we were working,
ஆக, நாங்கள் வேலையை தொடங்கிய முதற் வாரத்திலேயே,
07:04
we got the price down to 500 dollars.
மருந்தின் விலையை $500 அளவிற்கு குறைத்தோம்.
07:07
And all of a sudden, they could save seven times as many lives
திடீரென்று, அவர்களால் 7 மடங்கு உயிர்களை
07:09
for the same amount of money.
அதே விலையில் காப்பற்ற முடிந்தது.
07:11
Then we went to work with the manufacturers of AIDS medicines,
பிறகு, ஏமமிலி மருந்து தயாரிப்பாளரிடம் சென்று வேலை செய்தோம்.
07:13
one of whom was cited in the film,
அதில் ஒருவர் இந்த காணொளியில் குறிப்பிடப்படுகிறார்.
07:16
and negotiated a whole different change in business strategy,
நாம் அவரோடு மிகவும் மாறுபட்ட தொழில் உத்தியை பகிர்ந்துக் கொண்டோம்.
07:18
because even at 500 dollars, these drugs
ஏனென்றால் $500-இல் கூட, இந்த மருந்துகள்
07:23
were being sold on a high-margin, low-volume, uncertain-payment basis.
அதிக லாபம் வைத்தும், சிறிய அளவிலும், பணம் கிடைப்பதில் உள்ள உறுதியற்ற நிலை என்று இருந்தது.
07:26
So we worked on improving the productivity of the operations
அதனால் மருந்து தயாரிப்பு பணியில் உற்பத்தித் திறனை கூடுவதிலும்,
07:31
and the supply chain, and went to a low-margin, high-volume,
விநியோகச் சங்கிலி சீராக செயல் படுவதிலும் கவனம் செலுத்தினோம். மேலும் குறைவான லாபம் வைத்தும், உற்பத்தி பெருக்கியும்,
07:35
absolutely certain-payment business.
பணம் கிடைப்பதில் உறுதியான நிலையையும் ஏற்படுத்தினோம்.
07:39
I joked that the main contribution we made
எங்களது பங்களிப்பை, நான் எப்படி நகைப்பாக குறிப்பிட்டேன் என்றால்,
07:41
to the battle against AIDS was to get the manufacturers
ஏமமிலி நோய்க்கு எதிரான எமது போரில், மருந்து தயாரிப்பளர்களது மன நிலையை
07:44
to change from a jewelry store to a grocery store strategy.
நகைக்கடை வைத்திருப்பவர்களிலிருந்து, மளிகைக்கடை வைத்திருப்பவர்களைப் போல் மாறச் செய்தது.
07:45
But the price went to 140 dollars from 500.
இப்போது மருந்தின் விலை $500-இலிருந்து $140-க்குக் கீழே சென்றது.
07:51
And pretty soon, the average price was 192 dollars.
விரைவாக, மருந்தின் சராசரி விலை $192-க்கு நிலை பெற்றது.
07:55
Now we can get it for about 100 dollars.
இப்போது $100 விலைக்கு மருந்தினை வாங்க முடியும்
07:59
Children's medicine was 600 dollars,
குழந்தைகளுக்கான மருந்தின் விலை $600 என்று இருந்தது.
08:01
because nobody could afford to buy any of it.
யாரும் வாங்க முடியாத விலையில் இருந்ததால்,
08:03
We negotiated it down to 190.
அதன் விலையை $190-க்கு குறைவாக இருக்குமாறு பேரம் பேசி படிய வைத்தோம்
08:05
Then, the French imposed their brilliantly conceived airline tax
பிறகு, பிரெஞ்சு அரசாங்கம் மிகவும் சிந்தித்து செயல்படுத்திய வான்பயண வரி,
08:08
to create a something called UNITAID,
UNITAID உருவாக வழி செய்தது.
08:12
got a bunch of other countries to help.
ஏனைய நாடுகள் உதவிக்கு வர அழைத்தோம்.
08:14
That children's medicine is now 60 dollars a person a year.
இப்போது குழந்தைகளுக்கான மருந்து வெறும் $60-ஆக (ஒரு மனிதனுக்கு ஒரு ஆண்டுக்கு) குறைந்துவிட்டது.
08:16
The only thing that is keeping us from basically saving the lives
எங்களுக்கு முட்டுக்கட்டையாக இருப்பது, உயிர்களை காப்பாற்றத் தேவையான
08:19
of everybody who needs the medicine to stay alive
மருந்துகள் இருந்தும்,
08:24
are the absence of systems necessary to diagnose, treat and care
முறையாக நோயை கண்டறிந்து, பண்டுவம் செய்து கவனம் செலுத்தி
08:26
for people and deliver this medicine.
இந்த மருந்தினை மக்களிடம் எடுத்துச்செல்ல முடியவில்லை.
08:29
We started a childhood obesity initiative with the Heart Association in America.
அமெரிக்காவில் "இதய கூட்டமைப்பு" என்ற அமைப்போடு, சிறார்களிடம் உள்ள பருமன் குறித்த ஒரு முனைப்பில் ஈடுபட்டோம்
08:33
We tried to do the same thing by negotiating industry-right deals
இதிலும், நியாயமான தொழிலுக்கு ஏற்ற வகையில் அதே முயற்சிகளில் ஈடுபட்டோம்.
08:37
with the soft drink and the snack food industry to cut the caloric
இம்முயற்சி குளிர்பான மற்றும் நொறுவை தயாரிப்பு நிருவனங்களிடத்தில், அவற்றில் உள்ள கலோரி மதிப்பினையும்,
08:40
and other dangerous content of food going to our children in the schools.
மற்ற ஆபத்தான பொருட்களையும் அந்த தயாரிப்புகலிளிருந்து நீக்குவது குறித்து பேசினோம்.
08:45
We just reorganized the markets.
அதன் சந்தையினை சிறிது மாற்றி அமைத்தோம்.
08:49
And it occurred to me that in this whole non-governmental world,
அரசு சாரா அமைப்புகள் கோலோச்சும் இந்த காலத்தில், யாராவது
08:52
somebody needs to be thinking about organizing public goods markets.
பொது விநியோகப்பொருட்களின் சந்தை குறித்தும் அதனை முறைப்படுத்துவது குறித்தும் சிந்திப்பார்களேயானால்,
08:57
And that is now what we're trying to do,
அதைத்தான் இப்போது நாங்கள் செய்ய முயற்சி செய்கிறோம்.
09:02
and working with this large cities group to fight climate change,
புவிவெப்பநிலை மாறுதலை ஈடு செய்வது குறித்து, பெரிய பெரிய நகரங்களில் உள்ள அமைப்புகளோடு
09:04
to negotiate huge, big, volume deals that will enable cities
பெரிய அளவில் அவதானித்து, பெரிய பேரங்கள் படியச் செய்து , உலகின்
09:07
which generate 75 percent of the world's greenhouse gases,
75% பைங்குடில் வளிக்கு காரணமான நகரங்கள், விரைவாகவும்,
09:12
to drastically and quickly reduce greenhouse gas emissions
முனைப்பாகவும் பைங்குடில் வளி உமிழ்வு குறைக்க உதவும்
09:15
in a way that is good economics.
ஒரு வகையில் அதுவே நல்ல பொருளாதார முயற்சியும் கூட.
09:18
And this whole discussion as if it's some sort of economic burden,
மேலும் இந்த பெரிய அவதானிப்பு ஏதோ ஒரு பெரிய பொருளாதார சுமை போல சித்தரிக்கப்படுவது
09:22
is a mystery to me.
எனக்கு வியப்பளிக்கிறது
09:26
I think it's a bird's nest on the ground.
அது ஒன்றும் பெரிய விடயமாக எனக்குப்படவில்லை
09:27
When Al Gore won his well-deserved Oscar
அல் கோர், தனது ஆஸ்கார் விருதினை
09:29
for the "Inconvenient Truth" movie, I was thrilled,
"Inconvenient Truth" என்ற படத்திற்கு வென்றபோது நான் பெரிதும் உவகை அடைந்தேன்.
09:33
but I had urged him to make a second movie quickly.
ஆனால் நான் அவரை உடனே இரண்டாவதாக ஒரு திரைப்படம் எடுக்க கேட்டுக்கொண்டேன்.
09:37
For those of you who saw "An Inconvenient Truth,"
"Inconvenient Truth" படம் பார்த்தவர்கள் எல்லோருக்கும்
09:41
the most important slide in the Gore lecture is the last one,
கோரின் நீதிகளில் உள்ள மிக முக்கியமான கடைசிக் காட்சியான
09:45
which shows here's where greenhouse gases are going
இங்கு தான் பைங்குடில் வளி செல்கிறது என்றும்,
09:50
if we don't do anything, here's where they could go.
நாம் இதற்கு ஏதும் செய்யவில்லை என்றால், இந்த இடத்திற்கு தான் அவை செல்லும் என்றும் காட்டியது சிந்திக்கத்தூண்டுகிறது.
09:53
And then there are six different categories
மேலும் அவைகளில் 6 வகைப்பாடுகளாக,
09:55
of things we can do to change the trajectory.
அதன் போக்கை மாற்ற நாம் செய்ய வேண்டியிருக்கும்.
09:57
We need a movie on those six categories.
நாம் அந்த 6 வகைப்பாடுகளில் செயல்பட்டாக வேண்டிய அவசரத்தில் உள்ளோம்.
09:59
And all of you need to have it embedded in your brains
மேலும் இது எல்லோரது மனத்திலும் ஆழ பதிய வேண்டும்.
10:02
and to organize yourselves around it.
நாம் இதனை சுற்றி ஒரு அமைப்பாக செயல்பட வேண்டும்.
10:05
So we're trying to do that.
நாம் அதைத்தான் இப்போது செய்துக்கொண்டு இருக்கிறோம்.
10:08
So organizing these markets is one thing we try to do.
ஆக, சந்தைகளை சீரமைப்பது இந்த வகைப்பாட்டில் ஒரு வகை.
10:10
Now we have taken on a second thing, and this gets to my wish.
இப்போது நாம் இரண்டாவது வகைப்பாட்டிற்கு செல்வோம், இது எனது நினைப்பிற்கு ஒத்துப்போவது
10:13
It has been my experience in working in developing countries
வளர்ந்து வரும் நாடுகளில் பணி செய்வது எனது அனுபவத்தில் ஒன்று
10:17
that while the headlines may all be -- the pessimistic headlines may say,
அங்குள்ள முக்கிய தலைப்புகளில் எல்லாம் - அநேகமாக அது தோல்வி மனப்பான்மையை காட்டும் விதமாக
10:22
well, we can't do this, that or the other thing because of corruption --
அதை, இதை எல்லாம் எங்களால் இங்குள்ள ஊழலின் காரணமாக செய்ய முடியாது என்பார்கள்.
10:26
I think incapacity is a far bigger problem in poor countries than corruption,
நான் என்ன நினைக்கிறேன் என்றால், வளர்ந்து வரும் நாடுகளில் திறமையின்மையே ஊழலை விட மிகப்பெரிய சிக்கலாக இருக்கிறது.
10:30
and feeds corruption.
இந்த மனநிலை தான் ஊழலை வளர்தெடுக்கிறது.
10:36
We now have the money, given these low prices, to distribute
இந்த குறைவான விலையை காணும்போது, இப்போது நம்மிடம் பணத்திற்கு குறைவில்லை. உலகெங்கிலும் உள்ள
10:40
AIDS drugs all over the world to people we cannot presently reach.
நம்மால் எட்ட இயலாத மக்களுக்கு ஏமமிலி நோய்க்கு மருந்தினை விநியோகிக்க நம்மால் இப்போது முடியும்.
10:43
Today these low prices are available in the 25 countries where we work,
நாம் வேலை செய்யும் 25 நாடுகளில் இந்த விலை குறைந்த மருந்துகள் கிடைக்கின்றன.
10:50
and in a total of 62 countries,
மேலும் மொத்தமாக 62 நாடுகளில் இந்த மருந்து கிடைக்கிறது.
10:54
and about 550,000 people are getting the benefits of them.
ஏறக்குறைய 5, 50,000 மக்களுக்கு அந்த பயன்கள் கிடைக்கின்றன.
10:56
But the money is there to reach others.
மற்றவர்களுக்கும் கிடைக்க பணம் இருக்கிறது.
11:00
The systems are not there to reach the people.
ஆனால் அது மக்களுக்கு கிடைக்கச் செய்யும் வழி தான் இல்லை.
11:03
So what we have been trying to do,
ஆக, நாங்கள் என்ன செய்ய முயற்சி செய்கிறோம் என்றால்,
11:06
working first in Rwanda and then in Malawi and other places --
முதலில் ருவாண்டா நாட்டிலும், பிறகு மலாவி நாட்டிலும் பிறகு மற்ற நாடுகளிலும் வேலை செய்கிறோம் -
11:14
but I want to talk about Rwanda tonight --
ஆனால் இன்று மாலை நான் ருவாண்டா நாட்டை பற்றி நான் பேச விரும்புகிறேன் -
11:20
is to develop a model for rural health care in a very poor area
மிகவும் ஏழ்மையான பகுதிகளில், ஊரக சுகாதாரச் சேவையின் மாதிரி ஒன்றினை உருவாக்குவதற்கு -
11:22
that can be used to deal with AIDS, TB, malaria, other infectious diseases,
அம்மாதிரியைக் கொண்டு ஏமமிலி, எலும்புருக்கி, மலேரியா மற்றும் இதர தோற்று நோய்களில் கவனம் செலுத்தலாம்.
11:30
maternal and child health, and a whole range of health issues
தாய் - சேய் நலம், மற்றும் அனைத்து விதமான உடல் நல விவகாரங்களிலும்,
11:34
poor people are grappling with in the developing world,
வளர்ந்து வரும் நாடுகளில் ஏழை எளிய மக்கள் சந்திக்கும் சிக்கல்கள் என,
11:37
that can first be scaled for the whole nation of Rwanda,
மொத்த ருவாண்டா நாட்டிற்கும் ஒருங்கே ஒப்பளவு செய்யலாம்.
11:40
and then will be a model that could literally
பிறகு இந்த மாதிரியையே உலகின் மற்ற
11:44
be implemented in any other poor country in the world.
ஏழை நாடுகளிலும் செயல்படுத்தலாம்.
11:46
And the test is: one, will it do the job?
இதில் சோதனை என்னவென்றால்; ஒன்று, இது செயல்படுமா,
11:48
Will it provide high quality care?
இது மேம்படுமா - உயர் தர சேவையை அளிக்குமா?
11:50
And two, will it do it at a price
இரண்டு, இதன் செயல்பாட்டு விலை
11:53
that will enable the country to sustain a health care system
அந்த நாட்டின் உடல் நல அமைப்பினை நிலைத்து இருக்க வைக்குமா என்பது.
11:55
without foreign donors after five to 10 years?
5 அல்லது 10 ஆண்டுகளுக்கு பிறகு வெளிநாட்டு கொடையுதவி எதுவும் இல்லாமலும் செயல்படுவது போலவும் இருக்க வேண்டும்.
11:59
Because the longer I deal with these problems,
ஏனென்றால், இந்த சிக்கலை நான் தொடர்ந்து தீர்க்க பார்க்கும்பொது,
12:03
the more convinced I am that we have to --
என்னை மிகவும் நம்பவைப்பது என்னவென்றால்,
12:07
whether it's economics, health, education, whatever --
அது பொருளாதாரம் சார்ந்தோ, நலத்தை சார்ந்தோ, கல்வியை சார்ந்தோ, எதுவாக இருந்தாலும்,
12:09
we have to build systems.
நாம் சில அமைப்புகளை கட்டி எழுப்ப வேண்டும்.
12:12
And the absence of systems that function
இவ்வாறான இயங்கும் அமைப்புகள் இல்லாது போனால்
12:14
break the connection which got you all in this seat tonight.
உங்களை இந்த மாலை பொழுதில் இங்கு வரவழைத்திருப்பது நிகழ்ந்து இருக்காது.
12:17
You think about whatever your life has been,
உங்கள் வாழ்கை எப்படி இருந்தாலும் அதைப் பற்றி யோசிக்கிறீர்கள்,
12:21
however many obstacles you have faced in your life,
வாழ்வில் எந்த மாதிரியான தடைக்கற்களை தாண்டி வந்தீர்கள் என்பதை,
12:23
at critical junctures you always knew
இக்காட்டான அந்த தருணங்களை நீங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள்.
12:26
there was a predictable connection between the effort you exerted
யூகிக்கக்கூடிய ஒரு இணைப்பு, நீங்கள் அளித்த முயற்சிக்கும்,
12:29
and the result you achieved.
கிட்டிய பயனுக்கும் இடையே உள்ளதை நீங்கள் அறிவீர்கள்
12:33
In a world with no systems, with chaos,
ஓர் அமைப்பு இல்லாத குழப்பமான உலகத்தில்,
12:35
everything becomes a guerilla struggle,
எல்லாம் கொரில்லா போராட்டமாகி,
12:40
and this predictability is not there.
இவை குறித்த யூகிக்கும் தன்மை இல்லது போய்விடும்.
12:43
And it becomes almost impossible to save lives,
அதற்குப் பிறகு உயிர்களை காப்பது,
12:46
educate kids, develop economies, whatever.
குழந்தைகளுக்கு கல்வி கொடுப்பது, பொருளாதாரத்தை முன்னேற்றுவது, என்று எல்லாம் முடியாது போய்விடும்.
12:49
The person, in my view,
என் பார்வையில், ஒரு மனிதர்,
12:52
who has done the best job of this in the health care area,
நலத்திட்டங்கள் குறித்து, சிறந்த முறையில் பணியாற்றி
12:55
of building a system in a very poor area, is Dr. Paul Farmer,
ஏழைகளுக்கு ஒரு அமைப்பை உருவாக்கினார் என்றால் அது Dr. பால் ஃபார்மர் ஆவார்.
13:00
who, many of you know, has worked for now 20 years with his group,
அவருடைய குழுவில் அவர் 20 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார் என்று உங்கள் எல்லோருக்கும் தெரியும்.
13:04
Partners in Health, primarily in Haiti where he started,
அவரது குழு "பார்ட்னர்ஸ் இன் ஹெல்த்"-இல் அவர் முதன்மையாக ஹைட்டி நாட்டில் தொடங்கினார் என்பது தெரியும்.
13:09
but they've also worked in Russia, in Peru
அவர்கள் ரஷ்யா, பெரு மற்றும்
13:13
and other places around the world.
உலகின் இதர இடங்களிலும் வேலை செய்துள்ளார்கள்.
13:15
As poor as Haiti is, in the area where Farmer's clinic is active --
ஃபார்மரின் மருத்துவகம் எந்த துறையில் சுறுசுறுப்பாக இருக்கிறதோ - அந்த துறையில் ஹைட்டி நாடு பின்தங்கியுள்ளது ஒரு புறம் இருந்தாலும்,
13:17
and they serve a catchment area far greater
ஒரு பெரிய கூட்டத்திற்கு அவர்கள் சேவை செய்கிறார்கள் என்பதும்,
13:22
than the medical professionals they have would indicate they could serve --
அதுவும் மிகப்பெரிய எண்ணிக்கையில் தேவைப்படும் மருத்துவ வல்லுனர்கள் இல்லாமல் அவர்கள் சேவை புரிந்து,
13:24
since 1988, they have not lost one person to tuberculosis, not one.
1988-இலிருந்து இன்றுவரை, ஒருவரைக் கூட காசநோய்க்கு இழக்கவில்லை என்பதையும் உற்று நோக்க வேண்டும்.
13:28
And they've achieved a lot of other amazing health results.
அது மட்டும் இன்றி ஏனைய வியக்கத்தக்க மருத்துவ அதிசயங்களை அவர்கள் செய்து முடித்திருக்கிறார்கள்.
13:35
So when we decided to work in Rwanda
நாங்கள் ருவாண்டாவில் வேலை செய்ய முடிவு செய்த பொது,
13:40
on trying to dramatically increase the income of the country and fight the AIDS problem,
மிகப்பெரிய அளவில் வருவாயை பெருக்கி, எய்ட்ஸ் நோயை எதிர்க்கும் பொருட்டு,
13:44
we wanted to build a healthcare network,
ஒரு உடல் நலப்பாதுகாப்பு பிணையத்தை உருவாக்க நினைத்தோம்,
13:49
because it had been totally destroyed during the genocide in 1994,
ஏனெனில் 1994-இல் நடந்த இனவழிப்பில் அது முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டதும்,
13:51
and the per capita income was still under a dollar a day.
தலை விகித வருவாய் ஒரு நாளுக்கு ஒரு டாலருக்கும் குறைவாக உள்ளதென்பதும் காரணங்களாகும்.
13:55
So I rang up, asked Paul Farmer if he would help.
பால் ஃபார்மருக்கு தொலைபேசி, அவரால் உதவ முடியுமா என்று கேட்டேன்.
13:59
Because it seemed to me if we could prove there was a model in Haiti
ஏனென்றால் எனக்கு தெரிந்தவரை, ஹைட்டி நாட்டிற்கு ஒரு மாதிரி மற்றும்,
14:04
and a model in Rwanda that we could then take all over the country,
ருவாண்டா நாட்டிற்கும் ஒரு மாதிரி உண்டென்று நிரூபித்தால், அதனை நாட்டின் எல்லா மூலை முடுக்குகளுக்கும் எடுத்துக்கொண்டு போகமுடியும்.
14:07
number one, it would be a wonderful thing for a country
முதலாவது காரணம், அது அந்நாட்டிற்கு அருமையானதாகவும்,
14:11
that has suffered as much as any on Earth in the last 15 years,
இந்த புவியில் கடந்த 15 ஆண்டுகளாக மிகவும் அல்லலுற்ற நாடென்ற முறையில் அமையும்.
14:13
and number two, we would have something that could then be adapted
இரண்டாவது காரணம், நம்மிடம் உள்ள ஒரு மாதிரி,
14:17
to any other poor country anywhere in the world.
உலகில் உள்ள மற்ற ஏழை நாடுகளுக்கும் பொருந்தச் செய்வது போல் அமையும்.
14:21
And so we have set about doing that.
ஆகா நாம் அதனை செய்வது போல் நிறுவினோம்.
14:25
Now, we started working together 18 months ago.
இப்போது, நாம் 18 மாதத்திற்கு முன்பிலிருந்து கூடி பணி செய்யத் தொடங்கினோம்.
14:29
And we're working in an area called Southern Kayonza,
நாங்கள் பணி செய்யும் இடத்தின் பெயர் தெற்கு கயோன்சா,
14:33
which is one of the poorest areas in Rwanda,
அது ருவாண்டா நாட்டின் ஒரு ஏழ்மையான பகுதியாகும்.
14:37
with a group that originally includes about 400,000 people.
4,00,000 மக்களை உள்ளடக்கிய ஒரு குழுவோடு பணி செய்கிறோம்.
14:41
We're essentially implementing what Paul Farmer did in Haiti:
பால் ஃபார்மர் ஹைட்டி நாட்டில் என்ன செய்தாரோ, அதனை செயல்படுத்திக்கொண்டு இருந்தோம்.
14:47
he develops and trains paid community health workers
அதில் சம்பளத்திற்கு அமர்த்தப்பட்ட சமூக நலப் பணியாளர்களுக்கு அவர் பயிற்சி அளித்து உருவாக்குகிறார்.
14:52
who are able to identify health problems,
அவர்களால் உடல் நலக் குறைபாடுகளை கண்டுபிடிக்கவும்,
14:57
ensure that people who have AIDS or TB are properly diagnosed
எய்ட்ஸ் மற்றும் காச நோய் உள்ளவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு நோய் கண்டரிதலை முழுமையாக செய்து முடிக்கவும்,
15:01
and take their medicine regularly,
மேலும் அவர்கள் மருந்துகளை தவறாது உட்கொள்வதை உறுதி படுத்தவும்,
15:05
who work on bringing about health education, clean water and sanitation,
உடல் நலம், தூய்மையான நீர் மற்றும் சுகாதாரத்தைப் பற்றிய அறிவை புகட்டவும்,
15:07
providing nutritional supplements and moving people up the chain of health care
ஊட்ட சேர்க்கைகள் வழங்கவும், மக்களது உடல் நலத்தை அடுத்தகட்டத்திற்கு நகர்த்திக்கொண்டு போகுதல் என்று,
15:14
if they have problems of the severity that require it.
அவர்களுடைய பிரச்னைகளின் தீவிரம் உணர்ந்து அதற்கேற்ப செயல்பட வைப்பது.
15:19
The procedures that make this work have been perfected,
இந்த செயல்களைச் செய்யும் அவர்களது செயல்முறை,
15:23
as I said, by Paul Farmer and his team
நான் சொன்னதைப் போல, பால் ஃபார்மர் மற்றும் அவருடைய குழுவினரால்,
15:28
in their work in rural Haiti over the last 20 years.
நாட்டுப்புற ஹைட்டியில் அவர்களது 20 ஆண்டு வேலையின் மூலமாக கச்சிதமாக்கிவிட்டனர்.
15:31
Recently we did an evaluation of the first 18 months of our efforts in Rwanda.
ருவாண்டாவில், முதல் 18 மாதங்களாக நாங்கள் எடுத்த முயற்சிகளை மதிப்பீடு செய்து பார்த்தோம்.
15:34
And the results were so good that the Rwandan government
முடிவுகள் மிகவும் நன்றாக இருந்ததால், ருவாண்டா அரசே
15:40
has now agreed to adopt the model for the entire country,
அந்த மாதிரியை மொத்த நாட்டிற்கும் செயல்படுத்த முடிவு செய்துள்ளது மட்டுமின்றி,
15:45
and has strongly supported and put the full resources of the government behind it.
உறுதியுடன் அதனை ஆதரித்து மொத்த அரச வளத்தையும் அதற்கென முடுக்கிவிட்டுள்ளது.
15:48
I'll tell you a little bit about our team because it's indicative of what we do.
நான் எனது குழுவைப் பற்றி கொஞ்சம் கூறுகிறேன் ஏனென்றால் நாங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்பதனை எடுத்துக் கூறும்.
15:54
We have about 500 people around the world
உலகெங்கும் எங்களிடம் ஏறக்குறைய 500 பேர்,
15:58
working in our AIDS program, some of them for nothing --
எங்களது எய்ட்ஸ் பணியில் வேலை செய்கிறார்கள், அதில் சில பேர் ஒன்றும் செய்வதில்லை -
16:01
just for transportation, room and board.
அவர்கள் வெறும் போக்குவரத்து, அறைகள் மற்றும் தங்குவது என்று வேலை செய்கிறார்கள்.
16:05
And then we have others working in these other related programs.
பின் வெகு சிலர் மற்ற தொடர்புடைய திட்டங்களில் பணி செய்கிறார்கள்.
16:07
Our business plan in Rwanda
ருவாண்டாவில் எங்களது பணித்திட்டம்,
16:11
was put together under the leadership of Diana Noble,
டயானா நோபல் அவர்களின் தலைமையில் ஒருங்கிணைக்கப்பட்டது.
16:13
who is an unusually gifted woman,
அவர் அசாத்தியமான திறமை வாய்க்கப்பெற்ற பெண்மணி,
16:16
but not unusual in the type of people who have been willing to do this kind of work.
ஆனால் இது போன்ற பணிகளை செய்யும் துணிவு பெற்றவர்களிடமிருந்து அவர் வேறுபடவில்லை.
16:19
She was the youngest partner at Schroder Ventures in London in her 20s.
தனது 20-களில், லண்டனில் உள்ள ஷ்ரோடேர் வென்சர்சில் அவர் தான் மிகவும் இளமையான பங்குதாரர்.
16:24
She was CEO of a successful e-venture --
வெற்றிக்கனியை எட்டிய ஒரு மின்-நிறுவனத்தின் தலைமை செயலாட்சி அலுவலராக பணியாற்றியவர் --
16:29
she started and built Reed Elsevier Ventures --
அவர் ரீட் எல்செவியர் என்ற நிறுவனத்தைத் தொடங்கி அதனை கட்டியெழுப்பினார் --
16:31
and at 45 she decided she wanted to do something different with her life.
பின்னர் தனது 45-வது வயதில் எதாவது வித்தியாசமாக செய்யவேண்டும் என்று முடிவு செய்தார்.
16:35
So she now works full-time on this for very little pay.
அதனால் இப்போது இந்த திட்டப்பணியில் குறைவான சம்பளத்திற்கு முழுநேரமும் தன்னை அற்பநித்துக்கொண்டுள்ளார்.
16:38
She and her team of former business people have created a business plan
அவரும் அவரது தொழிலில் பங்குகொண்ட குழுவினரும் ஒரு திட்டவரைவினை,
16:42
that will enable us to scale this health system up for the whole country.
மொத்த நாட்டிற்கும் செயல்படுத்துவதுபோன்று பெருக்கக்கூடிய ஒரு நலத்திட்டத்தை உருவாக்கினர்.
16:46
And it would be worthy of the kind of private equity work
அந்த செயல்திட்டம் ஒரு தனியார் நிறுவனச் சிறப்போடு,
16:50
she used to do when she was making a lot more money for it.
அவர் முன்பு நிறைய பொருளீட்டியது போன்ற சிறப்பம்சம் பொருந்தியது போன்று விளங்குகிறது.
16:55
When we came to this rural area, 45 percent of the children under the age of five
நாங்கள் இந்த ஊரகப்புறத்திற்கு வந்தபோது, ஐந்து வயதிற்கு குறைந்த குழந்தைகளில் 45 விழுக்காட்டினர்,
16:59
had stunted growth due to malnutrition.
ஊட்டச்சத்துகுறையினால், வளர்ச்சி குன்றி இருந்தனர்.
17:04
23 percent of them died before they reached the age of five.
குழந்தைகளில் 23 விழுக்காட்டினர் ஐந்து வயதை எட்டுவதற்கு முன்பாகவே இறந்துபட்டனர்.
17:09
Mortality at birth was over two-and-a-half percent.
பிறக்கும்போதே இறக்கும் குழந்தைகளின் விழுக்காடு 2.5% ஆக இருந்தது.
17:17
Over 15 percent of the deaths among adults and children occurred
இறப்பு விகிதத்தில் 15 விழுக்காட்டிற்கும் மேல் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு இடையில்,
17:20
because of intestinal parasites and diarrhea from dirty water and inadequate sanitation --
அசுத்தமான நீரினாலும் வசதியற்ற கழிப்பிடங்கள் இல்லாததனால் ஏற்படுகின்ற குடற்புழுக்கள் மற்றும் வயிற்றுப்போக்கினால் விளைகிறது.
17:24
all entirely preventable and treatable.
இவை எல்லாம் முற்றிலும் சிகிச்சை அளிக்கக்கூடியதும், வரும் முன் காக்க முடிவதுமான நோய்கள்.
17:29
Over 13 percent of the deaths were from respiratory illnesses --
இறப்பு விகிதத்தில் 13 விழுக்காடு சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களினால் ஏற்படுவது.
17:32
again, all preventable and treatable.
இவை எல்லாம் கூட முற்றிலும் சிகிச்சை அளிக்கக்கூடியதும், வரும் முன் காக்க முடிவதுமான நோய்கள்.
17:36
And not a single soul in this area was being treated for AIDS or tuberculosis.
வியப்பளிக்கும் வகையில், இங்குள்ள ஒரு உயிர்க்கும் எய்ட்ஸ் மற்றும் காச நோய்க்கான சிகிச்சை கொடுக்கப்படவே இல்லை.
17:39
Within the first 18 months, the following things happened:
முதல் 18 மாதங்களில், கீழ்கண்டவை நிகழ்ந்தன:
17:45
we went from zero to about 2,000 people being treated for AIDS.
சுழியத்திலிருந்து 2000 பேர்களாக எய்ட்ஸ் சிகிச்சை எடுத்துக் கொள்பவர்களாக எண்ணிக்கை உயர்ந்தது.
17:49
That's 80 percent of the people who need treatment in this area.
அது இந்த பகுதியில் அந்த சிகிச்சையை வேண்டுவோரில் 80 விழுக்காடு ஆகும்.
17:53
Listen to this: less than four-tenths of one percent of those being treated
இதனைக் கேளுங்கள்: சிகிச்சையை எடுத்துக்கொள்பவர்களின் ஒரு விழுக்காட்டில் பத்தில் நான்கு பங்கினரே
17:57
stopped taking their medicine or otherwise defaulted on treatment.
தங்கள் மருந்தை உட்கொள்ள நிறுத்தியவர்கள் அல்லது சரியாக எடுத்துக் கொள்ளாதவர்கள்.
18:02
That's lower than the figure in the United States.
இதன் படி ஐக்கிய அமெரிக்காவை விட இந்த புள்ளிவிவரம் குறைவு.
18:06
Less than three-tenths of one percent
ஒரு விழுக்காட்டில் பத்தில் மூன்று பங்கிற்கும் குறைவானவர்களே
18:09
had to transfer to the more expensive second-line drugs.
விலை கூடுதலான, இரண்டாம் கட்ட மருந்துகள் உட்கொள்ளும் நிலைக்கு மாறியவர்கள் ஆவர்.
18:11
400,000 pregnant women were brought into counseling
400,000-க்கும் மேற்பட்ட கருவுற்ற தாய்மார்கள், கலந்தாய்வுக்கு வரவழைக்கப்பட்டு,
18:16
and will give birth for the first time within an organized healthcare system.
முதன் முதலில் ஒழுங்குபடுத்தப்பட்ட நலத்திட்ட அமைப்பிற்குள் குழந்தை பெற்றுக்கொள்ளுவர்.
18:20
That's about 43 percent of all the pregnancies.
அது மொத்த மகப்பேறில் 43 விழுக்காடு.
18:25
About 40 percent of all the people -- I said 400,000. I meant 40,000.
மொத்த மக்களில் 40 விழுக்காட்டினர் - நான் 4 லட்சம் பேர் என்று சொன்னேன். அதாவது 40, 000 பேர்.
18:30
About 40 percent of all the people who need TB treatment are now getting it --
மொத்த மக்களில் 40 விழுக்காட்டினருக்கு தேவைப்படும் காசநோய்க்கான சிகிச்சை தற்போது கிடைக்கிறது --
18:34
in just 18 months, up from zero when we started.
நாங்கள் ஒன்றுமில்லாது தொடங்கி வெறும் 18 மாதங்களில் இது சாத்தியமாயிற்று.
18:38
43 percent of the children in need of an infant feeding program
குழந்தைகளுக்கான உணவு முறை தேவைப்படுகின்ற 43 விழுக்காடு குழந்தைகளில்
18:42
to prevent malnutrition and early death
ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் இறப்பு இவற்றை தடுக்க அவர்கள்
18:45
are now getting the food supplements they need to stay alive and to grow.
உயிர் வாழ தேவைப்படும் உணவும், அவர்கள் வளரத் தேவைப்படும் உணவும் வழங்கப்படுகின்றது.
18:47
We've started the first malaria treatment programs they've ever had there.
அவர்களுக்கு இதுவரை கிடைக்கப்பெறாத மலேரியாவை குணப்படுத்தப்படும் முறைமையை நாங்கள் தொடங்கினோம்.
18:50
Patients admitted to a hospital that was destroyed during the genocide
இனவழிப்பின்போது சிதைக்கப்பட்டு மறுசீரமைக்கப்பட்ட ஒரு மருத்துவமனை
18:54
that we have renovated along with four other clinics,
மற்றும் இதர பண்டுதம் அளிக்கும் நான்கு நிலையங்களில் முழுமையாய் கட்டிமுடிக்கப்பட்ட இவை,
18:59
complete with solar power generators, good lab technology.
சூரிய ஒளியினால் இயங்கும் மின்னாக்கியுடனும் , நல்ல ஆய்வக தொழில்நுட்பத்துடனும் இயங்குகின்றன.
19:04
We now are treating 325 people a month,
இப்போது நாங்கள் ஒரு மாதத்தில் 325 பேர்களுக்கு பண்டுதம் பார்க்கிறோம்.
19:09
despite the fact that almost 100 percent of the AIDS patients are now treated at home.
உண்மை என்னவெனில் ஏமமிலி பாத்தித்த 100 விழுக்காட்டினருக்கு வீட்டில் வைத்தே பண்டுதம் பார்க்கப்படுகிறது.
19:14
And the most important thing is
மிக முக்கியமான விஷயம் என்னவென்றால்
19:20
because we've implemented Paul Farmer's model, using community health workers,
நாங்கள் பால் பார்மர் அவர்களின் சமூக நலப்பணியாளர்களைக்கொண்டு செயல்படும் மாதிரித்திட்டத்தை செயல்படுத்தியதால்,
19:23
we estimate that this system could be put into place for all of Rwanda
இந்த திட்டத்தை ருவாண்டா நாட்டின் எல்லா பகுதிகளிலும் செயல்படுத்த முடியும் என்று உத்தேசித்துள்ளோம். ஏனெனில்,
19:28
for between five and six percent of GDP,
5 அல்லது 6 விழுக்காட்டுக்கு இடைப்பட்ட பொருளாதார வளர்ச்சியில்,
19:34
and that the government could sustain that
அரசாங்கத்தால், அன்னிய உதவி ஏதுமின்றி
19:38
without depending on foreign aid after five or six years.
இந்த திட்டத்தை தொடர்ந்து ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளுக்கு தொடர இயலும்.
19:42
And for those of you who understand healthcare economics
அடிப்படை நல்வாழ்வு குறித்த பொருளாதாரத்தை புரிந்துகொள்பவர்களுக்கு,
19:48
you know that all wealthy countries spend between nine and 11 percent of GDP
எல்லா பணக்கார நாடுகளும் பொருளாதாரத்தில் ஒன்பதிலிருந்து பதினொன்று விழுக்காட்டை அடிப்படை நல்வாழ்விற்கு செலவு செய்கின்றன என்று தெரிந்திருக்கும்.
19:50
on health care, except for the United States, we spend 16 --
இதில் அமெரிக்க நாடு மட்டும் விதிவிலக்கு, நாம் 16 விழுக்காடு செலவு செய்கிறோம்.
19:55
but that's a story for another day.
அந்த கதையை இன்னொரு நாள் பார்க்கலாம்.
19:57
(Laughter)
(சிரிப்பு)
20:00
We're now working with Partners in Health and the Ministry of Health in Rwanda
இப்போது நாம் நலக்கூட்டாளிகளுடனும், ருவாண்டா நாட்டின் நலவாழ்வு அமைச்சகத்துடனும் இணைந்து பணியாற்றுகிறோம்.
20:02
and our Foundation folks to scale this system up.
இந்த முறைமையை விரிவுபடுத்த எமது அமைப்பு விரும்புகிறது.
20:07
We're also beginning to do this in Malawi and Lesotho.
மலாவி மற்றும் லெசோத்தோ நாடுகளில் இதே போன்று செயல்பட தொடங்கியுள்ளோம்.
20:11
And we have similar projects in Tanzania, Mozambique,
இதே மாதிரியான திட்டங்கள் தான்சானியா மற்றும் மொசாம்பிக் நாடுகளிலும் எம்மிடம் உள்ளன.
20:17
Kenya and Ethiopia with other partners trying to achieve the same thing:
கென்யா மற்றும் எத்தியோப்பிய நாடுகள் ஏனையவர்களுடன் இணைந்து இதனை போலவே திட்டத்தில் வெற்றி பெற விழைகின்றன.
20:21
to save as many lives as quickly as we can,
எத்தனை உயிர்களை எவ்வளவு விரைவாக காப்பாற்ற முடியுமோ அத்தனை உயிர்களை காப்பாற்றுவதே நோக்கம் என்றாலும்,
20:26
but to do it in a systematic way that can be implemented nationwide
ஆனால் அதனை செயல்படுத்துவது என்பது திட்டமிட்டபடி செயல்பட்டு, திட்டத்தினை நாடளாவி செயல்படுத்துதலே நோக்கம்.
20:28
and then with a model that can be implemented in any country in the world.
இந்த மாதிரியைக்கொண்டு உலகின் எந்தவொரு நாட்டிலும் செயல்படுத்தும் வண்ணம் இருத்தல் வேண்டும்.
20:31
We need initial upfront investment to train doctors, nurses,
மருத்துவர்கள், செவிலியர்கள், நலப்பணியாளர்கள் போன்றவர்களுக்கு போதுமான
20:35
health administration and community health workers throughout the country,
பயிற்சியை அளிக்க தேவையான முதலீடு எங்களுக்கு தேவைப்படுகிறது.
20:39
to set up the information technology, the solar energy,
மேலும் தகவல் தொழில்நுட்பம், சூரிய ஆற்றலை பயன்படுத்துதல் இவற்றை செயல் படுத்துதல்,
20:42
the water and sanitation, the transportation infrastructure.
நீர் மற்றும் சுகாதார வசதிகள் மேம்பாடு, போக்குவரத்து கட்டமைப்பு நிறுவுதல் என்று இத்தனைக்கும் முதலீடுகள் தேவைப்படுகின்றன.
20:45
But over a five- to 10-year period,
ஆனால் ஐந்திலிருந்து பத்தாண்டுகாலத்திற்கு,
20:48
we will take down the need for outside assistance
வெளியிலிருந்து தேவையான உதவிகளைப் பெற்றுக்கொண்டு,
20:51
and eventually it will be phased out.
படிப்படியாக அந்த உதவிகளை குறைத்துக்கொள்வதே குறிக்கோள்.
20:53
My wish is that TED assist us in our work and help us to build
என்னுடைய ஆவல், TED எம்முடைய பணியில் உதவி புரிந்தும்,
20:56
a high-quality rural health system in a poor country, Rwanda,
ருவாண்டா போன்ற ஏழை நாடுகளில் உயர் தர ஊரக நலவாழ்வினை செயல்படுத்த உதவி செய்தும்,
21:04
that can be a model for Africa,
மொத்த ஆப்ரிக்க கண்டத்திற்கும் மாதிரியாக திகழ வேண்டும் என்பதே.
21:08
and indeed, for any poor country anywhere in the world.
ஆப்ரிக்கா மட்டுமல்லாது உலகில் உள்ள அனைத்து ஏழை நாடுகளுக்கும் ஆகும்.
21:10
My belief is that this will help us to build a more integrated world
என்னுடைய நம்பிக்கை என்னவெனில் இந்த நம் முயற்சி, ஒருங்கிணைந்த உலகினை கட்டமைக்க உதவும் முகமாகவும்,
21:15
with more partners and fewer terrorists,
நிறைய கூட்டாளிகளையும், குறைவான எண்ணிக்கையிலேயே தீவிரவாதிகளையும் உருவாக்கும் முகமாகவும்,
21:21
with more productive citizens and fewer haters,
நிறைய நல்ல குடி மக்களையும், குறைவான எண்ணிகையிலேயே வெறுப்பவர்களை உருவாக்கும் முகமாகவும்,
21:24
a place we'd all want our kids and our grandchildren to grow up in.
நம்முடைய குழந்தைகளும், பேரப்பிள்ளைகளும் மகிழ்ச்சியுடன் வளரக்கூடிய இடமாகத் திகழ வேண்டும் என்பதே.
21:27
It has been an honor for me, particularly, to work in Rwanda
எனக்கு ருவாண்டாவில் வேலை செய்ததில் பெருமிதம் உண்டு.
21:33
where we also have a major economic development project
அங்கே பெரிய பொருளியல் சார்ந்த முன்னேற்றத் திட்டங்கள்,
21:39
in partnership with Sir Tom Hunter, the Scottish philanthropist,
ஸ்காட் நாட்டு கொடையாளர், சர். டாம் ஹண்டர் என்பவருடன் கூட்டாக செயலாக்கம் பெற்று,
21:42
where last year we, using the same thing with AIDS drugs,
கடந்த ஆண்டு எய்ட்ஸ் மருந்துக்கு செய்ததைப் போல,
21:47
cut the cost of fertilizer and the interest rates on microcredit loans by 30 percent
உர விலையையும், சிறு கடன்களின் மேல் உள்ள வட்டி விகிதத்தையும் 30% வரை குறைத்தும்,
21:50
and achieved three- to four-hundred percent increases
300 இலிருந்து 400 விழுக்காடு வரை
21:56
in crop yields with the farmers.
அதிகமான மகசூலை விவசாயிகளிடமிருந்து கிடைக்கச் செய்தோம்.
22:00
These people have been through a lot and none of us, most of all me,
இந்த மக்கள் மோசமான நிகழ்வுகளை சந்திக்கும் போது, யாருமே (நான் உட்பட)
22:02
helped them when they were on the verge of destroying each other.
அவர்கள் தம்மை தாமே அழித்துக்கொண்டு சாக முற்படும் போது உதவ முன்வரவில்லை.
22:08
We're undoing that now, and they are so over it and so into their future.
அதனை இப்பொது நாம் களைந்துக் கொண்டும், வாழ்வை அவர்கள் நம்பிக்கையோடும் எதிர்நோக்குகின்றனர்.
22:12
We're doing this in an environmentally responsible way.
அதனை சூழலுக்கு உகந்தவாறு பொறுப்புடன் செயல்படுத்திக் கொண்டு இருக்கின்றோம்.
22:18
I'm doing my best to convince them not to run the electric grid
மின்சார இணைப்பே இல்லாத 35% மக்களுக்கு, மின் தொகுப்பை
22:22
to the 35 percent of the people that have no access,
இயக்க வேண்டாம் என்று பெரு முயற்சி எடுத்து அவர்களுக்கு எடுத்துச் சொல்லி வருகிறேன்.
22:26
but to do it with clean energy. To have responsible reforestation projects,
முன்னேற்ற திட்டங்களை தூய ஆற்றலிலிருந்தும், பொறுப்பான காடு வளர்ப்பு திட்டங்களை செயல்படுத்தும் வழிமுறைகளையும் அவர்களுக்கு எடுத்துச் சொல்லிவருகிறேன்.
22:29
the Rwandans, interestingly enough, have been quite good, Mr. Wilson,
திரு. வில்சன் அவர்களே, ருவான்டர்கள் உண்மையில் மிகத் திறமையானவர்கள்.
22:34
in preserving their topsoil.
குறிப்பாக நாட்டின் மண்வளம் குறித்து மேல் மண்ணை பேணுவதில் அக்கறை செலுத்துகின்றனர்.
22:38
There's a couple of guys from southern farming families --
தெற்கில் உள்ள சில விவசாயக் குடும்பங்களில் சிலர் உள்ளனர் -
22:40
the first thing I did when I went out to this place
அந்த இடத்திற்கு நான் சென்ற போது, நான் முதலில் செய்தது,
22:44
was to get down on my hands and knees and dig in the dirt
நிலத்தில் இறங்கி முழங்கையால் மண்ணை எடுத்து,
22:46
and see what they'd done with it.
அவர்கள் அதில் என்ன செய்துள்ளார்கள் என்று பார்த்தது.
22:48
We have a chance here to prove that a country
இப்போது நமக்கு ஒரு வாய்ப்பாக,
22:50
that almost slaughtered itself out of existence
இருப்பிற்கே சில காலங்களுக்கு முன் வேட்டு வைத்துக்கொண்ட ஒரு நாடு,
22:54
can practice reconciliation, reorganize itself, focus on tomorrow
எப்படி இணக்கத்துடனும், மறு ஒழுங்கிற்கு தன்னை ஆட்படுத்திக் கொண்டும், நாளைய தன் எதிர்காலத்தை,
23:00
and provide comprehensive, quality health care with minimal outside help.
குறைந்த வெளிநாட்டு உதவியுடன், தரமான உடல் நலத்திட்டங்களை முழுமையாக நிறைவேற்றுகிறது என்று காணக்கிடைக்கிறது.
23:07
I am grateful for this prize, and I will use it to that end.
இந்த பரிசிற்கு நான் என்றென்றும் கடமைப்பட்டவன் ஆகின்றேன். இதனை நான் உள்ளவரை பயன்படுத்துவேன்.
23:14
We could use some more help to do this,
இதனை செய்ய நாம் சற்று அதிகமான உதவிகளை பயன்படுத்தலாம்.
23:20
but think of what it would mean if we could have a world-class health system
உலகிலேயே சிறந்த நலத் திட்டங்கள் நமக்கு கிடைத்தால் எப்படி இருக்கும் என்று எண்ணிப் பாருங்கள்.
23:24
in Rwanda -- in a country with a less-than-one-dollar-a-day-per-capita income,
ஒரு அமெரிக்க டாலருக்கும் குறைவான தனி நபர் வருமானம் உள்ள ருவாண்டா போன்ற நாடுகளில்
23:28
one that could save hundreds of millions of lives
இத்திட்டங்கள் நூறாயிரம் உயிர்களைக் காக்க வல்லது என்பதுடன்,
23:33
over the next decade if applied to every similarly situated country on Earth.
அடுத்த பத்தாண்டுகளில் ருவாண்டா போன்ற நாடுகளில் இதனை செயல்படுத்தினால் மேலும் சில நூறாயிரம் உயிர்களைக் காக்கும் என்பதில் ஐயம் இல்லை.
23:37
It's worth a try and I believe it would succeed.
இதனை முயற்சி செய்து பார்ப்பது ஒரு நல்ல முயற்சியே. மேலும் இந்த முயற்சி கண்டிப்பாக வெற்றி பெரும் என்று நான் ஆணித்தரமாக நம்புகிறேன்.
23:44
Thank you and God bless you.
நன்றி. கடவுளின் அருள் உங்களுக்கு கிடைக்கட்டும்.
23:48
(Applause)
(கைத்தட்டல்)
23:51
Translated by Ganesh Arunadann
Reviewed by vidya raju

▲Back to top

About the speaker:

Bill Clinton - Activist
Through his William J. Clinton Foundation, former US President Bill Clinton has become a vital and innovative force for world change. He works in four critical areas: health, economic empowerment, citizen service, and reconciliation.

Why you should listen

Elected President of the United States in 1992 and again in 1996, Bill Clinton left office determined to continue his life of service -- to build the kind of world he wants to hand down to his daughter. His William J. Clinton Foundation is focused on four critical areas: health security, with an emphasis on HIV/AIDS; economic empowerment; leadership development and citizen service; and racial, ethnic and religious reconciliation.

Foundation projects include working with pharmaceutical companies to lower the costs of medicines to needy areas, and, through his Clinton Foundation HIV/AIDS Initiative (CHAI), developing an innovative health care system that can be successful and sustainable throughout the developing world. His Clinton Global Initiative brings together world leaders to discuss the world's most pressing challenges.

In 2015, The Clinton Development Initiative partnered with Visa to help Rwandan farmers conduct business digitally, increasing their financial security and economic empowerment. 

Keep up with other updates and news from the Clinton Foundation here

More profile about the speaker
Bill Clinton | Speaker | TED.com