TED Talks with Tamil transcript

லூசி மார்சில்: மருத்துவர்கள் தங்களது காத்திருக்குமறைகளில் இலவச வரிப்பண சகாயமளிப்பது ஏன்

TED2018

லூசி மார்சில்: மருத்துவர்கள் தங்களது காத்திருக்குமறைகளில் இலவச வரிப்பண சகாயமளிப்பது ஏன்
1,241,202 views

90 விழுக்காடுக்கு மேலான அமெரிக்க சிறுவர்கள் ஆண்டுதோறுமாவது மருத்துவரைக் காண்கின்றதால், பெற்றோர்கள் பல மணிநேரங்களாய் காத்திருக்குமறைகளில் நேரம் செலவிடுகின்றனர். அந்நேரம் திறனான முறையில் பயன்படுத்தலாம் — உதாரணத்திற்கு, பணத்தை சேமிப்பதில். அவரின் "ஸ்ட்ரீட்க்ரெட்" நிறுவனத்தின் மூலம், சிறுவர் மருத்துவர் மற்றும் டெட் ஃபெலோ ஆகிய லூசி மார்சில் காதிருக்குமறையிலான பெற்றோர்களிடம் இலவச வரித்தயாரித்தல் சேவைகளை வழங்கி, ஒரு மருத்துவர் பரிசோதனை எப்படி தோற்றப்படும் என்பதை மாற்றியமைத்து, குடும்பங்களை வறுமையில் இருந்து மீட்க உதவுகிறார். இலவச வரித்தயாரித்தலும் ஆலோசனையும் அமெரிக்காவின் மிகச்சிறந்த வறுமை குணமடைவாக எப்படி இருக்கலாம் என கற்றுக்கொள்ளுங்கள்.

பாய் கேர்ல் பாஞ்சோ: "இறந்த காதல்"

TEDNYC

பாய் கேர்ல் பாஞ்சோ: "இறந்த காதல்"
287,759 views

ஒலிப்புலன் சார்ந்த இரட்டையர்கள் அனியல் ரீட் மற்றும் மத்தேயு புருக்‌ஷயர் (பாய் கேர்ல் பாஞ்சோவாக சேர்ந்து வாசிக்கின்றனர்) அவர்களின் "இறந்த காதல்" எங்கின்ற அமெரிக்கானா நாட்டுப்புற இசையையும் நவீன பாப் இசையையும் கலந்த சொந்த பாடலை இயற்ற டெட் மேடையேறி வருகின்றனர்.

மிக்ஹெயில் ஃஜைகார்: சமூகவலைத்தளங்களில் நடைபெற்றால் உருசியப் புரட்சி எப்படி தோற்றப்பட்டு இருந்திருக்கும்

TED2018

மிக்ஹெயில் ஃஜைகார்: சமூகவலைத்தளங்களில் நடைபெற்றால் உருசியப் புரட்சி எப்படி தோற்றப்பட்டு இருந்திருக்கும்
1,310,403 views

வரலாறு வெற்றி பெற்றவர்களால் எழுதப்படுகிறது என பழமொழி ஒன்று கூறுகிறது — ஆனால், அனைவராலும் எழுதப்பட்டால் எப்படி இருக்கும்? இதழியலாளர் மற்றும் டெட் ஃபெலோ மிக்ஹெயில் ஃஜைகார் அவர்கள், இறந்தவர்களுக்கான சமூகவலைத்தளம் என்கின்ற தங்களது ப்ராஜெக்ட்1917 இன் மூலம், உருசிய புரட்சியின் போது வாழ்ந்த 3000 க்கும் மேற்பட்டவர்களின் உண்மையான நாட்குறிப்புகளும் கடிதங்களும் காண்பித்துக் கொள்கிறார். லெனின், ட்ராட்ஸ்கி, மற்றும் குறைவாக கொண்டாடப்பட்ட ஒருசிலரின் தினந்தோறு சிந்தனைகளை காண்பிக்கும் மூலம், இத்திட்டம் உண்மையாகவே இருந்த வரலாற்றையும் எதிர்காலத்தில் படைக்க முடியுமான வரலாற்றையும் தெளிவுப்படுத்துகிறது. இந்த எண்முறை வரலாற்றுக்கதையை பற்றியும் 1968 ஆகிய முக்கிய ஆண்டைச் சார்ந்த ஃஜைகார் அவர்களின் புதிய திட்டத்தைப் பற்றியும் கேளுங்கள்.

எஸ்ஸாம் டாவோடு: மனநல ஆதரவை எப்படி அகதிகளிடம் வழங்குவது

TED2018

எஸ்ஸாம் டாவோடு: மனநல ஆதரவை எப்படி அகதிகளிடம் வழங்குவது
1,274,844 views

உலக அகதி நெருக்கடி ஒரு மனநல பெரும் பாதிப்பாகும். இலட்சக்கணக்கானவர்கள் இடப்பெயர்ப்பினாலும் சச்சரவினாலும் எதிர்க்கொள்ளும் துன்பங்களை தோற்கடிக்க உளவியல் ஆதரவு தேவையாகும். இச்சேதையை தவிர்க்க, சிறுவர் மனநல மருத்துவர் மற்றும் டெட் ஃபெலோ (TED Fellow) எஸ்ஸாம் டாவோடு அகதிகளின் (அவற்றில் காற்பங்கானவர்கள் சிறுவர்கள்) நினைவுகளை சிறிய இடையீடுகளின் மூலம் மாற்றியமைக்க முகாம்கள், மீட்பு படகுகள், மற்றும் கிரேக்க நாட்டிலும் நடுநில கடலின் கரையிலும் பணியாற்றி வருகிறார். "இந்த மனநல பெரும் பாதிப்பை தவிர்க்க நாம் அனைவரும் உதவலாம்," என்றார் டாவோடு. "முதலுதவி வெறும் உடலுக்கு மட்டும் தேவையில்லை, மூளைக்கும் ஆன்மாக்கும் தேவை தான் என நாம் முதலில் ஒப்புக்கொள்ள வேண்டும்."

ஓல்கா யர்கோவா: ரஷ்யாவின் போலி செய்தி பேரரசுக்கு எதிரான போராட்டம்

TED2018

ஓல்கா யர்கோவா: ரஷ்யாவின் போலி செய்தி பேரரசுக்கு எதிரான போராட்டம்
1,243,696 views

உண்மைகள் தவறாக இருப்பின், முடிவுகளும் தவறானவையாகவே அமையும் என்று ஆசிரியர் மற்றும் TED-யின் சக உறுப்பினரான ஓல்கா யூர்கோவா கூறுகிறார். தவறான செய்தி பரவலை நிறுத்துவதற்கு , அவரும் பத்திரிகையாளர் குழுவும் சேர்ந்து StopFake.org தொடங்கினார்கள். சாராத அல்லது தவறான புகாரை அம்பலப்படுத்தி பத்திரிகையாளர்கள், தலைவர்கள் மற்றும் நிறுவனங்களில் மேல் அவர்கள் இழந்துள்ள நம்பிக்கையை மீளமைப்பதற்காக இந்த StopFake.org துணைபுரியும் என்கிறார் அவர். அதோடு, தவறான செய்திகளுக்கு எதிரான போராட்டத்தைப் பற்றியும் அறியலாம்.

சிமோன் கிஜேர்ட்ஸ்: நீங்கள் ஏன் பயனற்ற பொருட்களை உருவாக்க வேண்டும்

TED2018

சிமோன் கிஜேர்ட்ஸ்: நீங்கள் ஏன் பயனற்ற பொருட்களை உருவாக்க வேண்டும்
2,808,344 views

இந்த மகிழ்ச்சியான, அவரது பிரமாதமான wacky படைப்புகள் செய்முறைகள் இடம்பெறும் இதயப்பூர்வமான பேச்சு, சிமோன் கிஜேர்ட்ஸ் தனது கைவினை பகிர்ந்து: பயனற்ற ரோபோக்கள் செய்யும். அவரது கண்டுபிடிப்புகள் - காய்கறிகளை அறுப்பதற்கும், முடி வெட்டுவதற்கும், லிப்ஸ்டிக் மற்றும் பலவற்றை வடிவமைப்பதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது - அரிதாக (எப்போதாவது) வெற்றியடைவது, மற்றும் அந்த புள்ளி. "பயனற்ற காரியங்களைச் செய்யும் உண்மையான அழகு, சிறந்த பதில் என்னவென்று உனக்குத் தெரியாது என்று இந்த ஒப்புகை உள்ளது" என்று ஜீர்ட்ஸ் கூறுகிறார். "உலகின் வேலை எப்படி இருக்கும் என்று உங்களுக்குத் தெரியும் என்று உங்கள் தலையில் அந்த குரலைத் திருப்புகிறது, ஒருவேளை ஒரு பல் துலக்கி ஹெல்மெட் பதில் இல்லை, ஆனால் குறைந்தபட்சம் நீங்கள் கேள்வியைக் கேட்கிறீர்கள்."

மைக்கேல் ரெயின்: குடியேறிகளின் குழந்தையாக இருந்தால் எப்படி இருக்கும்?

TED Residency

மைக்கேல் ரெயின்: குடியேறிகளின் குழந்தையாக இருந்தால் எப்படி இருக்கும்?
1,084,729 views

முதல் தலைமுறை குடியேறிகளின் கதைகளைக் கூறுவதே மைக்கேல் ரெயினின் நோக்கமாகும். அவரின் உரையில் குடியேறிகளின் கூற்றைப் பற்றி பகிர்ந்துள்ளார்.

மார்கரெட் கோல்ட் ஸ்டியூவர்ட்: மீயிணைப்பு எப்படி எல்லாவற்றையும் மாற்றியது

Small Thing Big Idea

மார்கரெட் கோல்ட் ஸ்டியூவர்ட்: மீயிணைப்பு எப்படி எல்லாவற்றையும் மாற்றியது
328,263 views

மீயிணைப்பு என்பது இணையத்தின் லெகோ குற்றியாகும். இது பயனர் அனுபவ நிபுணர் மார்கரெட் கோல்ட் ஸ்டியூவர்ட் அவர்களால் தெளிவாக்கப்பட்ட மீயிணைப்பின் விசித்திர வரலாறு ஆகும்.

ஈசாக்கு மிஸ்ராஹி: பொத்தான் என்பது எப்படி நடப்பை மாற்றியது

Small Thing Big Idea

ஈசாக்கு மிஸ்ராஹி: பொத்தான் என்பது எப்படி நடப்பை மாற்றியது
360,467 views

ஆடை வடிவமைப்பாளர் ஈசாக்கு மிஸ்ராஹியை கண்ணோட்டத்தில், ஒரு எளிதான பொத்தான் எப்படி உலகத்தை மாற்றியது.

ஜேசன் ஷேன்: வேலை தேடுகின்றீர்களா ? அனுபவத்தைக் காட்டிலும் திறமையை உயர்த்திக் கொள்ளுங்கள்

TED Residency

ஜேசன் ஷேன்: வேலை தேடுகின்றீர்களா ? அனுபவத்தைக் காட்டிலும் திறமையை உயர்த்திக் கொள்ளுங்கள்
2,116,581 views

நம்மில் சிலர் மட்டுமே படித்த துறைக்கான வேலையைச் செய்கின்றோம். ஜேசன் ஷேன் என்பவர் உயிரியல் துறையில் பட்டம் பெற்றார், ஆனால் தற்போது தொழில்நுட்ப நிறுவனத்தில் தயாரிப்பு மேலாளராக பணிபுரிகின்றார். இப்பதிவில் மனித ஆற்றல், வேலை தேடுபவர்கள் எப்படி தங்களை மேம்படுத்திக் கொள்வது, முதலாளிகள் ஏன் நம்பகதன்மை வாய்ந்த திறனாளிகளை எதிர் பார்க்க வேண்டும் என்பதை பற்றி கூறியுள்ளார்.

மைக் கில்: பவளப்பாறைகளை பாதுகாக்க மீன் சமுதாயங்கள் நமக்கு உதவுமா?

TEDGlobal 2017

மைக் கில்: பவளப்பாறைகளை பாதுகாக்க மீன் சமுதாயங்கள் நமக்கு உதவுமா?
977,662 views

மைக் கில் என்பவர் மீன்களை படிப்பார். புத்தம் புதிய நிழற்படக்கருவி அமைப்புகள் மற்றும் கணினி பார்வை தொழில்நுட்பத்தின் மூலம், இந்த TED ஃபெலோவும் அவர்களது உடனுழைப்பவர்களும், பவளப்பாறைகளில் நீந்தும் மீன்களின் நடத்தை அவற்றின் சுற்றுச்சூழல்களை எப்படி பாதிக்கிறது என ஆராய்ச்சி செய்கின்றார். இந்த பேச்சில், வெவ்வேறு மீனினங்கள் எப்படி சமுதாயங்களின் மூலம் தொடர்பு வைக்கின்றன எனவும், அச்சமுதாயங்களை இடையூறுவது நம்மில் கோடிக்கணக்கானவர்களுக்கு உணவை வழங்கி, உலகின் பொருளாதாரத்தை ஆதரிக்கும் பவளப்பாறைகளின் சூழல்களை எப்படி பாதிக்கலாம் எனவும் அறிந்துக்கொள்ளுங்கள்.

ஸோயாப்பி மும்பா: ஆஃப்ரிகாவின் தேவைகளுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட மருத்துவ தொழில்நுட்ப சாதனங்கள்

TEDGlobal 2017

ஸோயாப்பி மும்பா: ஆஃப்ரிகாவின் தேவைகளுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட மருத்துவ தொழில்நுட்ப சாதனங்கள்
1,011,025 views

சப்-சஹார ஆஃப்ரிகாவில், மின்வெட்டுகள், தொழில்நுட்ப குறைபாடு, மந்தமான இணைய வேகம், மற்றும் போதுமான மருத்துவ ஊழியர்களின்மை ஆகியவற்றால் மருத்துவ சேவை அமைப்புகள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றன. இச்சிக்கல்களைத் தீர்க்க, TED ஃபெலோ ஸோயாப்பி மும்பா, தங்களது குழுவினரைக் கொண்டு, தொடக்கத்தில் இருந்து ஒரு புதிய அமைப்பை உண்டாக்கிருக்கின்றார் — அவர்களது மின்னணு மருத்துவ பதிவுகளை ஒழுங்குப்படுத்தும் மென்பொருள் முதல், அதை கொண்டிருக்கின்ற உள்கட்டமைப்பு வரை. இந்த சிறிய, நம்பிக்கை மிகுந்த பேச்சில், மும்பாவின் "சகலகலா வல்லவன்" மனநிலை அவர்களை குறைவாக வளங்கள் கொண்ட இடங்களில் மருத்துவ சேவையை மேம்படுத்த எப்படி ஊக்கப்படுத்தியது என பகிர்கின்றார்.

மட்டில்டா ஹோ: சீனாவில் ஆரோக்கிய உணவின் வருங்காலம்

TED2017

மட்டில்டா ஹோ: சீனாவில் ஆரோக்கிய உணவின் வருங்காலம்
1,377,088 views

இரசாயனமில்லா, பூச்சிக்கொல்லியில்லா உணவு சீனாவில் அரிதாகும்: 2016 ம் ஆண்டில், சீன அரசாங்கம் 5 லட்சம் உணவு பாதுகாப்பு மீறல்களை வெறும் 9 மாதங்களில் தெரியப்படுத்தியது. பாதுகாப்பான, நிலையான உணவில்லாததனால், TED ஃபெலோ மட்டில்டா ஹோ சீனாவின் முதல் இணைய உழவர் சந்தையை நிறுவப்படுத்தி, பூச்சிக்கொல்லிகள், உயிர் எதிரிகள் மற்றும் ஹார்மோன்களைக் கட்டுப்படுத்தும் சட்டங்களை அமல்படுத்தினார். அவர்களது அமைப்பின் மூலம் எப்படி உள்ளூர், இயற்கையான உணவுகளை தேவைப்படும் குடும்பங்களுக்கு எப்படி வழங்குகின்றார் என பகிர்ந்துக்கொள்கிறார்.

ஹடி எல்டபெக்: பொருளாதாரத்தில் கலைஞர்களின் பங்களிப்பு -  அவர்களுக்கு நம்முடைய ஆதரவு

TED Residency

ஹடி எல்டபெக்: பொருளாதாரத்தில் கலைஞர்களின் பங்களிப்பு - அவர்களுக்கு நம்முடைய ஆதரவு
1,211,385 views

கலை, நமது கலாச்சாரத்தின் உயிர் -- ஆக வாழ்வதற்குக் கலைஞர்கள் ஏன் போராட வேண்டும் என நாம் எதிர்பார்க்கின்றோம்? கலைஞர்களுக்கான வாய்ப்புகளோடும் நிதி வாய்ப்புகளோடும் இணைப்பதற்கான ஓர் இணைய சேவையை உருவாக்கியுள்ளார், ஹடி எல்டபெக் -- இதன்வழி கலைஞர்கள் நன்மதிப்பிடப்படுவதோடு மட்டுமல்லாமல் கலையில் தங்கள் முழு கவனத்தைச் செலுத்தலாம்.

ந்நேடி ஓகோரஃபோர்: ஒரு வருங்கால
 ஆஃப்ரிக்காவை கற்பனை செய்யும் அறிவியற் புனைவுகள்

TEDGlobal 2017

ந்நேடி ஓகோரஃபோர்: ஒரு வருங்கால ஆஃப்ரிக்காவை கற்பனை செய்யும் அறிவியற் புனைவுகள்
1,013,746 views

”எனது அறிவியற் புனைவுகளுக்கு வேறு மூதாதைகள் - ஆஃப்ரிக்க மூதாதைகள்,” என்கிறார் எழுத்தாளர் ந்நேடி ஓகோரஃபோர். அவரது பிண்டி, லகூன் நாவல் பகுதிகளை வாசிப்பதற்கிடையே தனது படைப்புகளின் வேர்களையும் தன்னை ஊக்குவித்தவற்றையும் குறித்துப் பேசுகிறார் - தனது ஆஃப்ரோஃப்யூச்சரிஸ எழுத்தின் மூலம் திறக்கும் வித்தியாசமான கதவுகளைப் பற்றியும் பேசுகிறார்.

சினேயாட் பர்கே: ஏன் வடிவமைப்பு எல்லோரையும் உள்ளடக்க வேண்டும்

TEDNYC

சினேயாட் பர்கே: ஏன் வடிவமைப்பு எல்லோரையும் உள்ளடக்க வேண்டும்
1,354,955 views

நம்மில் பலருக்கு நடைமுறையில் தெரியாத பல விவரங்களை சினேயாட் பர்கே, தீவீரமாக அறிந்திருக்கிறார். 105செ.மீ (அல்லது 3'5") உயரமுள்ள அவருக்கு, இந்த வடிவமைக்கப்பட்ட உலகில்-ஒரு பூட்டு உள்ள உயரத்திலிருந்து கிடைக்கும் ஷூ அளவுகளின் வீச்சு வரை- அவரே தனக்கு வேண்டியதை செய்து கொள்ளும் ஆற்றலை அடிக்கடி தடுக்கிறது. ஒரு சிறிய நபராக உலகில் உலாவும்போது, என்னென்ன சந்திக்க வேண்டி இருக்கிறது என்று அவர் கூறுகிறார். மேலும் "யார்யாருக்கு நாம் வடிவமைக்கவில்லை" என்று கேட்கிறார்

அநாப் ஜெயின்.: எதற்காக நாம் வெவ்வேறு எதிர்காலங்களை கற்பனை செய்ய வேண்டும்.

TED2017

அநாப் ஜெயின்.: எதற்காக நாம் வெவ்வேறு எதிர்காலங்களை கற்பனை செய்ய வேண்டும்.
1,652,769 views

அநாப் ஜெயின் எதிர்காலத்திற்கு உயிரூட்டுகிறார், நாம் உருவாக்கிக் கொண்டிருக்கும் உலகை, தொட்டு, பார்த்து மேலும் உணரும் சாத்திய அனுபவங்களை உருவாக்குகிறார். உதாரணமாக, நமக்கு நம் தெருக்களை ரோந்து செய்யும் புத்திசாலியான இயந்திரங்கள் வேண்டுமா, அல்லது நமது மரபில் வரும் மரபணுக்கள் நம் சுகாதார பராமரிப்பை தீர்மானம் செய்ய வேண்டுமா? ஜெயினுடைய திட்டங்கள், நாம் ஏன் நமக்குத் தேவையான உலகிற்காக போராடுவது முக்கியம் என்று காண்பிக்கின்றன. இந்த கண்திறக்கும் பேச்சில், சாத்தியமான எதிர் காலத்தின் ஒரு க்ண்ணோட்டத்தைப் பாருங்கள்.

சோஃபி டக்கர்: "ஆஊ "

TEDNYC

சோஃபி டக்கர்: "ஆஊ "
1,379,794 views

எலெக்ட்ரோ-பாப் இரட்டையர் சோபி டக்கர் டெட் பார்வையாளர்களுடன் அவர்களது உற்சாகமான, ரிதமிக் பாடல் "ஆஊ ," பெத்த லேம்மையின் நடிப்பில் நடித்துள்ளார்

ரோட்ரிகோ கேபிரியலா: ஒரு அருமையான கிட்டார் இசை நிகழ்ச்சி

TED2015

ரோட்ரிகோ கேபிரியலா: ஒரு அருமையான கிட்டார் இசை நிகழ்ச்சி
2,186,547 views

கிட்டார் இசை கலைஞர்கள் ரோட்ரிகோ மற்றும் கேபிரியலா தங்கள் "த சவுண்ட்மேக்கர்" என்கிற பாடலுக்கு பல வகையான சிலிர்ப்பூட்டும் மெட்டுக்களில் புது வகையான ஸ்டைலில் இசைக்கின்றனர்.

அந்தோனி கோல்ட்ப்ளூம்: இயந்திரங்களிடம் நாம் இழக்க நேரிடும் --மற்றும் இழக்க நேராத பணிகள்.

TED2016

அந்தோனி கோல்ட்ப்ளூம்: இயந்திரங்களிடம் நாம் இழக்க நேரிடும் --மற்றும் இழக்க நேராத பணிகள்.
2,426,356 views

பொறிக்கற்றலென்பது, இனி, கடன் அபாயத்தை மதிப்பிடுவது மற்றும் அஞ்சல்களை வரிசைப்படுத்துவது போன்ற எளிய பணிகளுக்கு-- மட்டும் அல்ல--இன்று, அது கட்டுரையை வரிசைப்படுத்துவது, நோயைக் கண்டறிவது போன்ற சிக்கலான பயன்பாடுகளை செய்யக்கூடியது. இந்த முன்னேற்றங்களுடன் ஒரு சஞ்சலமான கேள்வியும் எழுகிறது: உங்கள் பணியை எதிர்காலத்தில் ஒரு ரோபோ செய்யுமா என?

ஜில் ஹிக்ஸ்: பயங்ரகரவாதத் தாக்குதலிலிருந்து நான் பிழைத்ததும், அதிலிருந்து கற்றதும்.

TEDxSydney

ஜில் ஹிக்ஸ்: பயங்ரகரவாதத் தாக்குதலிலிருந்து நான் பிழைத்ததும், அதிலிருந்து கற்றதும்.
906,073 views

கலவரமும் வெறுப்புணர்வும் மூட்டிய தீயின் சாம்பலிலிருந்து மீண்டெழுந்த கருணை, மனிதம் ஆகியவற்றின் கதையே ஜில் ஹிக்ஸ் அவர்களின் கதை. ஜூலை 7, 2005, அன்று லண்டன் நகரில் பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டு உயிர்பிழைத்த அவர், அந்நாளின் நிகழ்வுகள் பற்றியும், மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புகையில் தான் கற்ற பாடங்கள் பற்றியும் பகிர்ந்துகொள்கிறார்.

சீமா பன்சால்: எப்படி பயன்தராத கல்வி கற்றல் முறையை மாற்றுவது?....பணத்தேவையில்லாமல்

TED@BCG Paris

சீமா பன்சால்: எப்படி பயன்தராத கல்வி கற்றல் முறையை மாற்றுவது?....பணத்தேவையில்லாமல்
1,441,340 views

சீமா பன்சால், இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் 15000 பள்ளிகளில், பொது கல்வித்துறையை சீர்திருத்த லட்சிய இலக்கை வைத்தார். 2020 ஆம் ஆண்டிற்குள், 80 சதவிகித மாணவர்கள் தகுதிப்படி அறிவை கொண்டிருப்பார்கள். இந்த லட்சியத்தினை கூடுதல் வளங்கள் இல்லாமல் செய்து முடித்து, சீர்திருத்தம் கொண்டுவரவே அவர் எண்ணுகிறார். பன்சால் மற்றும் அவரது குழுவினர், நேர்பட, புது யுக்திகளான குறுந்செய்தி, குழு பகிர்தல் போன்றவற்றின் மூலம் வெற்றி காண்கின்றனர். மேலும், ஏற்கனவே, ஹரியானாவில் மாணவர்கள் கற்கும் மற்றும் ஈடுபாட்டு அளவில் முன்னேற்றத்தை அளந்துள்ளனர்.

ரேஷ்மா சாஜானி: பெண்களுக்கு வீரத்தை கற்றுக்கொடுங்கள், நேர்த்தியை அல்ல

TED2016

ரேஷ்மா சாஜானி: பெண்களுக்கு வீரத்தை கற்றுக்கொடுங்கள், நேர்த்தியை அல்ல
4,574,990 views

பெண்களை நேர்த்தியாகவும், ஆண்களை வீரமாகவும் வளர்க்கிறோம் என்று ரேஷ்மா சாஜானி, Girls Who Code நிறுவனர் சொல்கிறார். வாலிப பெண்கள் எப்படி அபாயங்களை எதிர்க்கொண்டு ப்ரோக்ராம் செய்ய அறிந்து கொள்வதை பற்றி அறிவிக்கிறார். அவர், "குறைகளில் உள்ள நிறைவை எப்படி இளம் பெண்களுக்கு ஒவ்வொருவரும் சொல்லவேண்டும்." என்கிறார்.

சாமுவேல் கொஹென்: அல்சைமர் முதுமையின் ஒரு பகுதியல்ல - அதைக் குணப் படுத்த முடியும்

TED@BCG London

சாமுவேல் கொஹென்: அல்சைமர் முதுமையின் ஒரு பகுதியல்ல - அதைக் குணப் படுத்த முடியும்
2,161,085 views

உலகம் முழுவதும் 40 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் அல்சைமர் நோயினால் பாதிக்கப்படுகின்றனர். இது தொடர்ந்து வரும் ஆண்டுகளில் பெருமளவில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், 100க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக இந்த நோய்க்கான சிகிச்சை முறையில் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. விஞ்ஞானி சாமுவேல் கோஹென் அல்சைமர் ஆராய்ச்சியில் நம்பிக்கை தரும் ஒரு புதிய திருப்புமுனையைப் பகிர்ந்துகொள்கிறார். கோஹன் கூறுகிறார், " அல்சைமர் ஒரு நோய்", "அதை நாம் குணப்படுத்த முடியும். "

சல்வடோரே யாகோனேசி: என் மூளைப் புற்று நோயை வெளிப்படுத்திய போது என்ன நடந்தது?

TEDMED 2013

சல்வடோரே யாகோனேசி: என் மூளைப் புற்று நோயை வெளிப்படுத்திய போது என்ன நடந்தது?
1,162,252 views

ஓவியர் சல்வடோரே யாகோனேசிக்கு மூளைப் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டதும் அவர் செயலற்று இருக்க மறுத்துவிட்டார். அதாவது 'காத்திருப்பவனாக' (Patient ). அவர் தனது மூளை ஸ்கேன்களை இணையத்தளத்தில் வெளியிட்டு உலக மக்களிடம் அதற்கான சிகிச்சையைக் கோரினார். அரை மில்லியனிலும் அதிகமான மக்களிடமிருந்து மருத்துவ ஆலோசனைகள், ஓவியம், இசை, மற்றும் உணர்ச்சிபூர்வமான ஆதரவைப் பெற்றார்.

லீ மொகோபே: மாற்றுப் பாலினராய் உணர்வதைப் பற்றி ஒர் சக்தி மிகு கவிதை

TEDWomen 2015

லீ மொகோபே: மாற்றுப் பாலினராய் உணர்வதைப் பற்றி ஒர் சக்தி மிகு கவிதை
1,424,084 views

தனித்துவம் மற்றும் நிலை மாற்றம் பற்றி கவிதை மூலம் நடத்தும் இந்த ஆய்வில் " நான் என் உடலின் ஒரு புதிர், கேட்கப்பட்டு பதில் தரப்பட்டாத ஒரு கேள்வியாய் இருந்தேன்" என்கிறார் , TED பட்டதாரியும் கவிஞருமான லீ மொகோபே. உடல்கள் மற்றும் அவை பற்றி கூறப்படும் கருத்துகள் பற்றி சிந்தனையைத் தூண்டும் ஒரு பரிமாற்றம்.

டோனி ஃபேடெல்: டிஸைன் செய்வதின் அதாவது வடிவமைப்பதின் முதல் ரகசியம் - கவனிப்பது

TED2015

டோனி ஃபேடெல்: டிஸைன் செய்வதின் அதாவது வடிவமைப்பதின் முதல் ரகசியம் - கவனிப்பது
2,616,210 views

மனிதர்களாகிய நாம் " விஷயங்கள் இருக்கும் விதத்திற்கு" வேகமாகப் பழகிப் போய் விடுகிறோம். ஆனால் டிஸைனர்களுக்கு, இப்பொழுது விஷயங்கள் இருக்கும் விதம் ஒரு வாய்ப்பு .... இவைகளை மேம்படுத்த முடியுமா? எப்படி? இந்த வேடிக்கையான, குளு குளுவென்ற சொற்பொழிவில், IPOD மற்றும் Nest வெப்ப மானி உருவாகக் காரணமாயிருந்த இவர் கவனிப்பதற்கும் - மேலும் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கும் - சில சிற்றாலோசனைகள் வழங்குகிறார்.

ஜாய் அலெக்ஸாண்டர்: பழங்கால ஜாஸ் இசையமைக்கும் ஒரு 11 வயது மேதை

TED2015

ஜாய் அலெக்ஸாண்டர்: பழங்கால ஜாஸ் இசையமைக்கும் ஒரு 11 வயது மேதை
2,408,207 views

ஒரு இளம் வாலிபனிடமிருந்து எதிர்பாராத கூர்மையான நவீன பியானோ ஜாஸ் வாசிக்கும் தனது தந்தையின் பழைய பதிவுகளை கேட்டு வளர்ந்த ஜாய் அலெக்ஸாண்டர். ஒரு 11 வயது நிரம்பிய இளம் வாலிபனுடைய சிறப்பான திலோனியள் மாங்க் கிலாசிகை சிறப்பாய் வாசிப்பதை TED கூட்டத்துடன் கேளுங்கள்.

பில் கிராஸ்: முதல் முயற்சி நிறுவனங்கள் வெற்றி பெறுவதின் ஒரே முக்கிய காரணம்.

TED2015

பில் கிராஸ்: முதல் முயற்சி நிறுவனங்கள் வெற்றி பெறுவதின் ஒரே முக்கிய காரணம்.
6,555,115 views

பில் கிராஸ் அனேக முதல் முயற்சி நிறுவனங்களை ஸ்தாபித்துள்ளார்.மற்றும் பலவற்றை அடைகாத்து வளர்த்துள்ளார். ஏன் சில வெற்றி பெற்றன, ஏன் சில தோல்வியடைந்தன என்பதை அறிய ஆவல் கொண்டார். அதனால் தன்னுடைய மற்றும் மற்றவர்களுடைய நூற்றுக் கணக்கான கம்பெனிகளிடமிருந்து தகவல்கள் சேகரித்தார். .ஐந்து முக்கிய தன்மைகளின் படி அவைகளை வரிசைப் படுத்தினார். மற்ற காரணங்களிடமிருந்து தனித்து நின்ற ஒரு காரணம் அவரையுமே ஆச்சரியத்திலாழ்த்தியது.

பெல் பெஸ்ஸி: உங்களது கனவுகளை அழிப்பதற்கான 5 வழிகள்

TEDGlobal 2014

பெல் பெஸ்ஸி: உங்களது கனவுகளை அழிப்பதற்கான 5 வழிகள்
5,198,096 views

நாங்கள் அனைவரும் இன்றியமையாத மற்றும் ஒட்டுமொத்த விளைவு மாற்ற திறன் கொண்ட உற்பத்தியை உருவாக்க, வெற்றிகரமான நிறுவனத்தை ஆரம்பிக்க, சிறந்த விற்பனையாகும் புத்தகத்தை எழுத ஆசைப்படுகிறோம். ஆனால் தற்போதுவரை எம்மில் ஒரு சிலரே அதை உண்மையில் செய்கிறார்கள். பிரேசிலைச் சேர்ந்த தொழிலதிபர் பெல் பெஸ்ஸி என்பவர் உங்களது கனவுத் திட்டங்கள் ஒருபோதும் நிறைவேறாது என்ற உறுதிப்பாட்டை இலகுவாக நம்பக்கூடிய ஐந்து கதைகளால் வேறு பிரிக்கிறார்.